பெண் வட்டாட்சியர் உயிரோடு எரித்து கொலை: பெரும் பரபரப்பு

Loading...

தெலுங்கானா மாநிலத்தில் பெண் வட்டாச்சியர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அப்துல்லாபூர்ரெட் என்ற பகுதியில் விஜயா ரெட்டி என்ற பெண் வட்டாச்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவர் இன்று வழக்கம்போல் பணிக்கு வந்தபோது விவசாயி ஒருவரால் உயிரோடு ஏரித்து கொல்லப்பட்டார். பட்டப்பகலில் ஒரு பெண் வட்டாட்சியர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...

தெலங்கானாவில் வட்டாட்சியராக பணிபுரிந்த விஜயா ரெட்டி, சுரேஷ் என்ற விவசாயியிடம் நில பத்திர பதிவுக்கு லஞ்சம் கேட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் என்ற விவசாயி இதுகுறித்து வட்டாட்சியர் விஜயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுரேஷ் திடீரென விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி விவசாயி சுரேஷ் எரித்ததாகவும் செய்திகள் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பலர் கண்டித்து வந்தபோதிலும் ஒரு விவசாயியிடம் லஞ்சம் கேட்டால் இதுதான் நடக்கும் என்று ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*