அடுத்த ஓராண்டுகளுக்கு 30 % சம்பளம் கிடையாது – மத்திய அரசு அதிரடி !

அடுத்த ஓராண்டுகளுக்கு 30 % சம்பளம் கிடையாது – மத்திய அரசு அதிரடி !

Loading...

இந்தியாவில் கொரோனா காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கூடிய அமைச்சரவை சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 63,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது.

Loading...

கடந்த 13 நாட்களாக இந்தியாவில் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால தொழில்கள் முடங்கி பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமயை சமாளிக்க அரசு தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் மக்களிடம் நிதிக் கேட்டுள்ளது. அதற்காக பிரதமரின் பொது நிவாரண நிதியில் நிதி சேர்ந்துகொண்டுள்ளது.

அடுத்த கட்டமாக சிக்கன நடவடிக்கையாக இன்று நடைபெற்ற அமைச்ச்ரவை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் சிலவற்றை அரசு செய்துள்ளது. அதன் படி 1. அடுத்த  இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட மாட்டாது மற்றும் 2. பிரதமர் உள்ளிட்ட எம்பிக்களின் ஓராண்டு சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைகள் யாவும் கொரோனா நிவாரண நிதிக்காகப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*