Connect with us

#24 Exclusive

பாஜகவும் இல்லை, சிவசேனாவும் இல்லை: ஆளுனர் எடுத்த அதிரடி முடிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மாதம் தேர்தல் முடிவடைந்து, அந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்தும் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இருப்பினும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சி கருத்து வேறுபாடு காரணமாக இன்னும் ஆட்சியை அமைக்காமல் உள்ளது

இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதியுடன் சட்டமன்றத்தின் காலம் முடிவடைந்து விட்டது என்பதால் தற்போது முடிவெடுக்க வேண்டிய நிலையில் ஆளுனர் உள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவை அவர் முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால் இதுவரை ஆட்சி அமைக்க பாஜக முன்வர வில்லை. இதனையடுத்து அவர் சிவசேனா கட்சிக்கு ஒரு வாய்ப்பு அளித்தார். சிவசேனாவும் தங்களிடமுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு தரும் கட்சிகள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் தெரிவிக்காததால் அந்தக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது

Loading...

இந்த நிலையில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளை அடுத்து, அடுத்த பெரிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நாளை 8.30 ணி வரை மட்டுமே காலக்கெடு என்றும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Loading...

பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் போதுமான பலத்தை உறுதிப்படுத்தி தெரிவிக்காத நிலையில் மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை ஆளுநர் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமா? என்பதை நாளை இரவு வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

ஒருவேளை தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் எந்த கட்சியும் ஆட்சியும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Loading...

Trending