நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் கொடுக்கிறது அரசு முன்மாதிரி முயற்சி !

நோயாளிகளுக்கு மாதம்  10 ஆயிரம் கொடுக்கிறது அரசு முன்மாதிரி முயற்சி !

நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர மாநில முதலமைச்சராக, திரு. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மேலும் ஒரு புதிய திட்டத்திற்கான அரசாணையை அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நீண்ட கால நோய்களால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு, மாதந்தோறும் பென்ஷன் வழங்கும் திட்டத்தை, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தலசீமியா, அனிமீயா, ஹிமோஃபீலியா உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

மேலும், நோய் பாதிப்பால் நடமாட முடியாமல் முடங்கி உள்ளவர்கள் மற்றும் சக்கர நாற்காலியிலுள்ள நோயாளிகள், சிறுநீரக பாதிப்புகளால் அவதிப்பட்டு வருபவர்கள் என, அனைவருக்கும் மாதம், ஐந்து ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகளை பெற, மக்கள் உள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து சான்றிதழ் பெற்று தர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *