ஐயோ போராட்டக்காரர்கள் தாக்கி விட்டார்களே கதறும் கார்த்திகேயன் இதைத்தானே பாஜக சொன்னது இப்போது கதறி என்ன பயன் !

ஐயோ போராட்டக்காரர்கள்  தாக்கி விட்டார்களே கதறும் கார்த்திகேயன் இதைத்தானே பாஜக சொன்னது இப்போது கதறி என்ன பயன் !

பத்திரிகை துறை என்பது நடப்பதை நடக்கும் விதமாக சொல்லும் என்ற எதிர்பார்ப்பு அழிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, மத்திய அரசு கலவரக்காரர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்த போது மனித உரிமையை மீறிவிட்டதா மத்திய அரசு என விவாதம் நடத்திய தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இன்று அதே வன்முறையால் பாதிக்கப்பட்ட போது நடவடிக்கை வேண்டும் என கதறி இருக்கிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகரன் என்பவர் தனியார் ஊடகத்தில் டெல்லியில் பணிபுரிகிறார், டிரம்ப்பின் இந்திய வருகை மற்றும் மோடியை விமர்சனம் செய்து தன்னை இடது சாரிய பத்திரிக்கை நிருபர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் வழக்கம் போல் டெல்லியில்நடைபெறும் கலவரம் குறித்து செய்திகளை சேகரிக்க சென்ற இவர் உட்பட இருவர் மீது கலவரக்காரர்கள் தாக்கி இருக்கிறார்கள், அதுவும் அவர்களது பெயரை கேட்டு மதத்தை உறுதி செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் இதனை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Loading...

குறிப்பாக எப்போதும் நடுநிலை பேசும் கார்த்திகேயன் உள்ளிட்ட செய்தியாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலவர காரர்களுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர், ஆனால் ஒருவரும் உண்மையான கலவரக்காரர்களை கண்டிக்கவில்லை. இந்நிலையில்தான் தற்போது தமிழக பத்திரிகையாளர்களை நோக்கி பலரும் விமர்சனங்களை வீசி வருகின்றனர்.

Loading...

பயங்கரவாதம் வன்முறை என்பது இரண்டு பக்கம் கூர்மையான ஆயுதங்களை கொண்டது ஆனால் இதனை இதுநாள் வரை மதம் உரிமை என பேசியதற்கு பலனாக டெல்லியில் பத்திரிகையாளர்கள் கூட தாக்க படக்கூடிய சம்பவம் அரங்கேறி இருப்பதாக விமர்சனம் வைக்கின்றனர்.

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு என்கிற போர்வையில் இந்தியாவின் சொத்துக்களை தீவைத்து கொளுத்துவதும், அமைதியை குழைத்து கலவரக்காடாக மாற்றுவது தான் போராட்ட காரர்கள் நோக்கம் என பாஜக எச்சரித்தது அப்போது அதனை தனிப்பட்ட உரிமை என பேசிய பத்திரிகையாளர்கள்.

இப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட பின்பு போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடுவது வியப்பாக உள்ளதாக விமர்சிக்கின்றனர், மத்திய அரசு வலுவான நடவடிக்கை எடுத்து கலவரக்காரர்களை ஒடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

நல்லதோ கெட்டதோ அடுத்தவனுக்கு வந்தால் அது செய்தி நமக்கு வந்தால் மட்டுமே பாதிப்பு இனியாவது CAA எதிர்ப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்கள் மீது கலவரத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உடன்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

:-செ. உதயகுமார்.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *