அமெரிக்காவுடன் பிரச்சனை என்றால் கூகுள், பேஸ்புக் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யுமா இந்தியா!! விமர்சகரின் கேள்வி பெரும் வைரல்!!

அமெரிக்காவுடன் பிரச்சனை என்றால் கூகுள், பேஸ்புக் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யுமா இந்தியா!! விமர்சகரின் கேள்வி பெரும் வைரல்!!

Loading...

கடந்த 15 ஆம்தேதியில் இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்கள் இவருக்கும் இடையே இரு நாட்டு ராணுவ வீரர்கள் ஆவேசமாக மோதிக்கொண்டனர், இதனிடையில் இந்திய வீரர்கள் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்து உள்ளனர். இந்த தாக்குதலில் சீனாவிற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் சீனா இராணுவர்கள் 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருநாடுகளுக்கு ஏற்பட்ட மோதலில் இந்தியா – சீனா இடையே பல்வேறு நிலைகளில் பேச்சு வார்த்தைகள் மற்றும் போர் பதற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் லடாக் மோதலில் சீன பொருட்களை உபயோகப்படுத்துவதை புறக்கணிக்க வேண்டும் என்று எழுச்சிக் குரல் எழுப்பி உள்ளனர். இதன் அடிப்படையில்
சீனா அறிமுகம்ப்படுத்திய டிக் டாக் செயலியானது, சீனாவிற்கு அடுத்து அதிகப்படியாக உபயோகிப்பது இந்தியா ஆகும். அதுமட்டும் இல்லாமல் டிக் டாக்கை சுமார் 611 மில்லியன் பேர் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு

Loading...

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கருதி இந்திய சட்டப்பிரிவு எண் 69 A -ன் கீழ் சீனா ஆஃப்கள் ஆன டிக் டாக், ஷேர் இட், ஹெலோ, யூசி பிரௌசர் என மொத்தம் 59 ஆப்களை தடைசெய்ய கோரி திடீரென நேற்று இரவு இந்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளன. இதற்கு பலர் தரப்பில் இருந்து ஆதரவு அளித்து உள்ளனர், இருப்பினும் சிலர் தரப்பில் மறுப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி பெரும்

பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக, அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளரர். அவை இந்தியா – சீனா எல்லை பிரச்சனைகள் மோதலால் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியான சீனா ஆப்கள் டிக் டாக், ஷேர் இட், ஹெலோ, யூசி பிரௌசர் என 59 ஆப்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. அதே பிரச்சனை வரும் காலத்தில் உலக ஐக்கிய நாடுகள் ஆன

அமெரிக்காவுடன் பிரச்சனை ஏற்பட்டால் பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், கூகுள் எல்லாவற்றையும் இந்தியா தடை செய்யுமா? என்றும் அவ்வாறு தடை செய்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை என்ன ஆகும் என்றும் , சீனாவின் செயலிகளை தடை செய்வதால் மட்டும் இந்தியா-சீனா பிரச்சனை முடிந்து விடாது என்றும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியே பிரச்சனைகளை

தீர்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார், இக்கேள்வியானது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக மாறி வருகின்றன, இந்நிலையில் பலரை யோசிக்க தக்க ஒன்றாக உள்ளது என குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*