Connect with us

#24 Exclusive

சபாஷ் சரியான போட்டி ஒரு கோடியை வெல்வாரா ஷாநவாஸ் ! இல்லை ஓடி ஒழிய போகிறார்களா CAA எதிர்ப்பாளர்கள் !!

CAA எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் கடந்த பாராளுமன்ற கூட்ட தொடரில் கொண்டுவரப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாக அமலானது.

இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்வர்கள், பவுத்தர்கள், பாரசீகள் போன்ற மதம் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் இஸ்லாமியர்களை சேர்க்க வேண்டும் என்றும் இது திட்டமிட்டு இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் செயல் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்தான் பல்வேறு இடங்களில் கலவரங்கள் போராட்டங்கள், CAA விற்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அதிரடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன, மேலும் பல இடங்களில் இஸ்லாமியர்களில் அதிமுக இயக்கங்களில் இருப்பவர்கள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

Loading...

இந்த நிலையில் மத்திய அரசு இந்த சட்டம் மூலம் இந்தியாவை சேர்ந்த எந்த மதத்தை சேர்ந்தவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும், எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை மேற்கொண்டு வருவதாக கூறியது, ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கேட்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த சூழலில்தான் நாமக்கல் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் k தங்கவேல் என்பவர் அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.

Loading...

இதன் மூலம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மூலம் யாராவது ஒரு இந்தியர் பதிப்படைந்தார் என ஆட்பாரபூர்வமாக நிரூபித்தால் 1 கோடி ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார், இதனை அடுத்து பலரும் போட்டியில் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்த்த சூழலில் தற்போதுவரை ஒருவர் கூட பங்கு பெறவில்லையாம்.

மேலும் இந்த கடிதத்தை எப்போதும் பொய் புளுகுமூட்டையினை அவிழ்த்து விடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷாநவாஸ் என்பவருக்கும் அனுப்பியுள்ளதாகவும் அவருக்கு நோட்டீஸ் சென்று சேர்ந்ததா இல்லையா என தகவல் தெரியவில்லை எனவும் இதன் மூலம் அவரும் போட்டியில் பங்கேற்கலாம் என பாஜகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அட இந்த அறிய வாய்ப்பினை யாராவது பயன்படுத்துவார்களா இல்லை கண்டும் காணாமல் கடந்து செல்வார்களா என பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் !

©TNNEWS24

Loading...

Trending