Connect with us

#24 Exclusive

நல்ல கதைகளுக்கு இங்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை.கோவையில் நடிகர் மாதவன் ஆதங்கம்.

நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு இங்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என கோவையில் நடிகர் மாதவன் ஆதங்கப்பட்டார்.கோவையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது அவர் இதை தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் சாக்லெட் பாயாக பல டீன் ஏஜ் பெண்களின் கனவுநாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன்.மேடி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவர் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார்.பல வெற்றி படங்களை தந்துள்ள இவர் அவ்வப்போது பல வித்தியாசமான, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடிய மாதவன் இங்கு மசாலா பாடல்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நல்ல கதைகளை கொண்ட படங்களுக்கு கிடைப்பதில்லை என கூறினார்.மேலும் மசாலா பாடல் இல்லாத காரணத்தால் தான் நடித்த இறுதி சுற்று படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டதாக கூறினார்.மேலும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்கள் பள்ளி தேர்வை தைரியத்துடனும் தெளிந்த மனதுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

Loading...
Loading...

Trending