ஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம் தெரியுமா? அதிர்ச்சி அளிக்கும் தங்கம் கடத்தல் பின்னணி !!!

கடந்த வாரம் தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். இது போல ஒவ்வொரு நாளும் சுமார் 1 டன் தங்கம் சட்டவிரோதமாக நமது நாட்டிற்குள் வந்து கொண்டேதான் இருக்கிறது.

Loading...

இந்திய பொருளாதாரத்தில் ஆபரணங்கள் உற்பத்தி துறை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது, இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 15 சதவீதமும் பங்களிக்கிறது. இது 5 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது.

உலகில் அதிகளவில் தங்கம் நுகர்வு செய்யும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா, அதிகம் தங்கக் கடத்தல் நடக்கும் நாடுகளில் முதலிடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதனால் உலகில் உண்மையாக அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். (வருடத்திற்கு சுமார் 1200 டன், இது உலக மொத்த தங்க உற்பத்தியில் சுமார் 35% 🤦‍♂️🤦‍♂️)

Loading...

இறங்கு முகமே காணாமல் ஏறு முகத்துடன் மட்டுமே போய்க் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை, தங்கத்தின் மீதான முதலீடு நல்ல பலன் கொடுக்கும் என்ற எண்ணமும் மக்களிடையே நிலவி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம்வரை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவதாக உலக தங்கக் கவுன்சில் கூறுகிறது.
மும்பை, சென்னை, திருவனந்தபுரம், மங்களூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களின் வழியாகவே அதிக கடத்தல்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2011 க்கு பிறகு இறக்குமதி வரியை உயர்த்தியதால் கடத்தல் கும்பல் பல்வேறு நூதனமான முறைகளில் தங்கத்தை கடத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ தங்கம் சட்ட விரோதமாக நமது நாட்டிற்குள் வந்தால் சுமார் ₹5 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதாவது டன் ஒன்றுக்கு ₹50 கோடி இழப்பு. 400 டன் தங்கம்வரை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருகிறது எனில் அரசுக்கு சுமார் ₹20,000 கோடி இழப்பு.

சுங்க அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் என பலரை தாண்டி எப்படி தங்கம் கடத்தி வரப்படுகிறது என்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்தால் 60 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருவிகள் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர்.

குருவிகள் கடத்தலில் ஈடுபடுவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். முக்கியமாக குருவிகளின் குடும்ப சூழ்நிலை, பண தேவை என எல்லாவற்றையும் அறிந்த பிறகும், அவர்களின் கல்வி சான்றிதழ், சொத்து ஆவணங்கள் என எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. ஒரு குருவி வெளிநாட்டிற்கு சென்று தங்கத்தை கடத்தி வரும் வரை அவருக்கான செலவுகளை கடத்தல் கூட்டத்தின் தலைவனே பார்த்துக்கொள்வான்.
இப்படி இருக்கும் குருவிகள் தங்கம் கடத்த பயன்படுத்தும் முறைகள் பலவிதமானவை.

ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வருவது, தங்கத்தை உருக்கி உருளையாக்கி தொண்டை வழியே விழுங்கி வயிற்றில் மறைத்து எடுத்து வருவது (இங்கு வந்த பின்னர் இனிமா கொடுத்து எடுக்கப்படும்), உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வருவது, ஊனமுற்றவர்களின் சக்கர நாற்காலியில் எடுத்து வருவது, வயதானவரின் வாக்கிங் ஸ்டிக்கிற்குள் மறைத்து வைப்பது, தங்கத்தை வேறு உலோகங்களுடன் கலந்து எடுத்து வருவது, சென்ட் பாட்டில்களின் உள்ளே வைத்து எடுத்து வருவது, செல்போன் பேட்டரியை கழற்றிவிட்டு அதில் தங்கக் கட்டியை வைப்பது, ரேடியோ, டி.வி, ஸ்பீக்கர், போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் வைத்து எடுத்துவருவது, சிகரெட், வாட்ச், வாட்டர் பாட்டில், கட்டிங் பிளேயர், உணவு பொருட்கள், சூட்கேஸின் கைப்பிடிக்குள் வைத்து எடுத்து வருவது என தினமும் அதிகாரிகளே வியப்படையும் வகையில் புதுப்புது முறைகளில் கடத்தி வருகின்றனர்.

இப்படி விமானங்களின் மூலம் கடத்தி வருபவர்களை தகவலின் அடிப்படையிலோ, சந்தேகத்தின் அடிப்படையிலையோ கொண்டு வருபவர்களை அதிகாரிகள் கைது செய்து சோதனை செய்வார்கள். மேலும் கடத்தலில் ஈடுபடுபவர்களை அதிகாரிகள் சுலபமாகவும் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் எல்லோரையும் கைது செய்வதில்லையாம். கணக்கிற்காக சிலரை மட்டுமே கைது செய்வதாகவும் கூறப்படுகிறது. கடத்தலுக்கு முக்கிய காரணமே அதிகாரிகள் தான் என்ற தகவலும் வெளிவருகிறது.

பொதுவாக, விமான நிலையங்களில் சோதனையின்போது கிராம் கணக்கில் தங்கம் சிக்கியதாகத்தான் தினசரி நாம் கேள்விப்படுகிறோம்.
அது ஏன் என்றால், ஒருவர் 20 லட்சத்துக்கு தங்கத்தை கடத்தி வந்து, அதிகாரிகளிடம் சிக்கினால் அவர்களிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கு சட்டத்திலும் இடம் உண்டு. பெரியதாக தண்டனை கிடைக்காது, குறைந்த அபராதத்துடன் முடிந்து விடும். பெரும்பாலும் தங்க கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும், சும்மா கணக்கு காட்டுவதற்காக தான் கிராம் கணக்கில் கடத்தி வரும் சில குருவிகளை பிடிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

நன்றி -வீரபத்திரன்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3901 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*