ஐஸ்கிறீம் வாங்கி தரவில்லை என்று, காதலனை கொடூரமாக கொன்ற பெண்

ஐஸ்கிறீம் வாங்கி தரவில்லை என்று, காதலனை கொடூரமாக கொன்ற பெண்

சீனாவின் ஹெனான் நகரத்தை சேர்ந்த காதல் ஜோடி, ஜூமாடியன் கடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அபோது வெயில் அதிகமாக அடித்ததால், காதலி காதலனிடம் ஐஸ்கிரீம் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு காதலனோ நீ ஏற்கனவே மிகவும் உடல் பருமன் அதிகமாக இருக்கிறாய், இதில் ஐஸ்கிறீம் போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டால் இன்னும் உடல் பருமன் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.

அந்த இடத்தில் காதலன் தனது உடல் எடையை பற்றி கிண்டல் செய்ததாக எடுத்துக்கொண்ட காதலி மிகவும் ஆத்திரம் அடைந்தாள், எனினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மேலும் நடக்க தொடங்கினால். பிறகு தனது காதலனை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று 2 கத்திரிக்கோலை வாங்கி வந்தால்.அதற்கு காதலன், எதற்காக இப்போது கத்திரிக்கோல் வாங்கினாய் என்று கேட்ட அடுத்த நொடியே, அந்த கத்திரிக்கோலை வைத்து காதலனை சரமாரியாக வயிற்றில் குத்தினால்.

இதனால் ரத்த வெள்ளத்தில் காதலன் சுருண்டு விழுந்தான், உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading...
Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *