குடியுரிமை போராட்டத்தில் கலந்துகொண்டதால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சென்னை மாணவர்

குடியுரிமை போராட்டத்தில் கலந்துகொண்டதால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சென்னை மாணவர்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் நாட்டைவிட்டு வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லின்டென்தல் என்ற மாணவர் சமீபத்தில் சென்னை ஐஐடி மாணவர்களால் நடத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் அவர் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் கொண்ட ஒரு பதாகையை வைத்திருந்ததாகவும் இதனை அடுத்து அவர் மீது குடியரிமை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது

விசாரணைக்கு பின்னர் அவர் விசா விதிமுறைகளை மீறி உள்ளது உறுதி செய்யப்பட்டதால் அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று அந்த மாணவர் ஜெர்ம்னை திரும்பிச் சென்றார்

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *