பதவியேற்றதும் ஜெனரல் பிபின் ராவத் அதிரடி உத்தரவு !!

பதவியேற்றதும் ஜெனரல் பிபின் ராவத் அதிரடி உத்தரவு !!

இந்தியாவின் முதல் பாதுகாப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் கூட்டத்தில், ஜெனரல் பிபின் ராவத், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் பிரிவுக்கு நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக வான் பாதுகாப்பு கட்டளையகத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கான ஒருங்கிணைந்த சேவைகளுக்கான பொதுவான அமைப்பை உருவாக்கவும் முன்னுரிமை அளித்துள்ளார். “ஜூன் 30, 2020 க்குள் வான் பாதுகாப்பு கட்டளையகத்தினை உருவாக்கும் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கூட்டுபடைகள் தலைமை தளபதி உத்தரவிட்டுள்ளார்” என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது ஜெனரல் பிபின் ராவத், முப்படை தளபதிகளுக்கு ராணுவ படைகளின் இடையிலான ஒற்றுமை மற்றும் தோழமை உணர்வினை தோற்றுவிக்இ பரிந்துரைகளை வழங்குமாறு அறிவுறுத்தினார். இதற்கென ஒரு தனித்துவமான அமைப்பு செயல்படுவதையும் மேலும் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகிய பாதுகாப்பு படைகளிடம் இது குறித்து ஆலோசிக்குமாறு பணித்தார்.

ஒவ்வொரு சேவைக்கும் அதன் தனிப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படையின் வான் பாதுகாப்பு தளவாடங்களை ஒருங்கிணைப்பதற்கும், கூட்டாக நாட்டிற்கு வான் பாதுகாப்பு வழங்குவதற்கும் ஒரு வான் பாதுகாப்பு கட்டளையகம் நிச்சயம் வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர் காரணம் இது இன்றைய நவீன போர்முறைகளின் காரணமாக இன்றியமையாதது ஆகிறது. தனித்தனியே முப்படைகளிடமும் உள்ள தளவாடங்கள் பிரிந்து செயல்படுகின்றன ஆகவே அனைத்து வான் பாதுகாப்பு தளவாடங்களையும் ஒரே கட்டளையகத்தின் கீழ் ஒன்றிணைத்து செயல்பட வேண்டியதாகிறது. அத்தகைய கட்டளையகத்தை வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்றால் நம் நாட்டின் உள்வரும் எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் குறித்த ஆரம்ப எச்சரிக்கையை வழங்குவதன் மூலம் எளிதில் தடுக்க முடியும் மேலும் இது விண்வெளியில் உள்ள தளவாடங்களை பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது. இது ஏற்கனவே உள்ள முப்படை கட்டளையகங்களான முலோபாய படைகள் பிரிவு, அந்தமான் நிகோபார் முப்படைகள் கட்டளையகம் மற்றும் முப்படை சிறப்பு படைகள் பிரிவு ஆகியவற்றின் தன்மையை ஒத்த பிரிவாக இருக்கும்.

Loading...

“ஜூன் 30க்கும் டிசம்பர் 31, 2020 க்குள் இதனை செயல்படுத்துமாறு ஜெனரல் பிபின் ராவத் கேட்டு கொண்டார். அதைப்போலவே முப்படைகளுக்கும் பொதுவான பணிமனைகள் மற்றும் சரிபார்ப்பு மையங்களை உருவாக்குவதை குறித்தும் பேசினார், இது நிதி மற்றும் மனிதவளம் வீணாவதை தவிர்க்கும்.

Loading...
Loading...

Mukilvani Senthivel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *