ஐபிஎல் போட்டிகள் நடக்குமா ? சூசகமாக பதில் சொன்ன கங்குலி !

ஐபிஎல் போட்டிகள் நடக்குமா ? சூசகமாக பதில் சொன்ன கங்குலி !

Loading...

ஐபிஎல் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடத்த சில நாட்களாக இந்தியாவில் தனது கிளையை விரிவுபடுத்தியுள்ளது . இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 15000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள நிலையில் . இந்தியாவில் இதுவரை 534க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக வரும் 29 ஆம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக இந்திய பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15க்கும் பிறகு நடப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி ‘ ஐ.பி.எல்.போட்டிகளை தள்ளிவைப்பதாக அறிவித்த அன்று எந்த இடத்தில் இருந்தோமோ அதே இடத்தில் தான் இப்போதும் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எந்த மாற்றமும் இல்லை.  3 அல்லது 4 மாதங்கள் கழித்து போட்டியை நடத்தும் திட்டம் உள்ளதா? என்று கேட்டால் அது சாத்தியம் இல்லை என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சர்வதேசத் தொடர்கள் பாதிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3935 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*