ஜூலை 5 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு!!

ஜூலை 5 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு!!

Loading...

இந்தியாவில் கொரோன தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் ஊரடங்கில் இழந்த பொருளாதாரத்தை மீட்க, ஊரடங்கில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்தேன் வருகின்றன. அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை ஆகும்.


இந்நோய் தொற்றை கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கர்நாடகா மாநிலத்தில் 11,923 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. மற்றும் கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் ஆன பெங்களூரு நகரில் நாள்தோறும் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதால், அம்மாநிலத்தில் கொரோன தொற்றை

Loading...

கட்டுப்படுத்த கர்நாடக அரசு சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பெங்களூரு காவேரி இல்லத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில், முன்பு இருந்த உத்தரவுகளில் சிறிது மாற்றத்தில் தற்போது இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் வரும் ஜூலை 5-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு முடிவு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அமலில் இருக்கும் என்றும், வருகிற ஜூலை 10ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமை அன்றும் விடுமுறை வழங்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்து உள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*