இன்று முதல் 2 யூனியன் பிரதேசங்களாக பிரியும் ஜம்மு-காஷ்மீர்!

இன்று முதல் 2 யூனியன் பிரதேசங்களாக பிரியும் ஜம்மு-காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன்களாக பிரிக்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்து அதற்கான ஒப்புதலை மக்களவை மற்றும் மாநிலங்களவை பெற்றது. மேலும் இதற்கான உத்தரவும் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது

இதனை அடுத்து இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக செயல்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்கனவே முர்மு என்பவர் ஆளுநராக இருந்து வரும் நிலையில் இன்று லடாக் ஆளுநராக ராதாகிருஷ்ணன் என்பவர் பதவி ஏற்க உள்ளார்

Loading...

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்ற யூனியன்கள் போல் துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது என்பதும் இந்த யூனியன் பிரதேசம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Loading...

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் முதல் முறையாக ஒரு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ளது. அதேபோல் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது

Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *