Connect with us

#24 Exclusive

பாரிஸில் இருந்து சென்னை வந்த முகமது சோதித்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி ! கைது செய்து விசாரணை !

சென்னை விமான நிலையத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையின்போது, ரூ.47.8 லட்சம் மதிப்பிலான மொத்தம் 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

     புதன்கிழமை அன்று பாங்காங்கிலிருந்து, வந்து சேர்ந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர் பையில் கொண்டு வந்திருந்த எம்பி3 பிளேயர் உள்ளே மறைத்து கொண்டுவரப்பட்ட வெள்ளி முலாம் பூசப்பட்ட 32 தங்கத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெள்ளிப்பூச்சை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே 24 காரட் சுத்த தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  ரூ. 10.83 லட்சம் மதிப்புள்ள 259 கிராம் எடையுள்ள இத்தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

     முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று சுங்கத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாரிஸிலிருந்து வந்து சேர்ந்த பிரான்ஸ் நாட்டின் முகமது ஹரூண் மாரிக்கர் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவரது கால்சட்டைப் பையிலிருந்து ஒட்டு நாடாவில் கட்டப்பட்டிருந்த பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. இப்பொட்டலத்தை திறந்து சோதித்தபோது, 24 காரட் சுத்தமான, ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுள்ள இரண்டு தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Loading...

மேலும், 22 காரட் சுத்தமான ஒவ்வொன்றும் 556 கிராம் எடையுள்ள 70 தங்க நாணயங்கள் மற்றும் 18 காரட் சுத்தமான 234 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியும் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தத்தில், இவரிடமிருந்து ரூ. 37 லட்சம் மதிப்புள்ள 990 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

Loading...

     இந்த சம்பவங்கள் குறித்து புலனாய்வு நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதுவரை தமிழகத்தில் தங்கத்தை கடத்தி வந்ததில் பிடிபட்ட 89% நபர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், அதே மதத்தை சேர்ந்த மற்ற நேர்மையான பயணிகளும் இது போன்ற கடத்தல் காரர்களால் விமான நிலையங்களில் அதிக அளவு சோதனை செய்யப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இனியாவது திருந்துவார்களா?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending