Connect with us

#24 Exclusive

வளர்ப்பு மகளையே திருமணம் செய்த ‘பெரியார்’ படம் பள்ளியிலா கலவரமான தருமபுரி ! (வீடியோ இணைப்பு )

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியத்தில் உள்ள அரங்கபுரம் பகுதியில், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் சுற்றுச் சுவர்களில் மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், பாரதியார், ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர் போன்ற தலைவர்களிடம் படம் வரைவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஜெரால்ட்டு என்பவர் பள்ளி நிர்வாகத்தினரிடம் அனுமதி பெற்றுள்ளார்.

அதன்படி சுவர்களில் வர்ணம் பூசி காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், அப்துல் கலாம், பாரதியார், திருவள்ளுவர் மற்றும் நேரு ஆகிய தலைவர்களின் படங்களை வரைந்துள்ளார். இந்நிலையில் திடீர் என்று பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின்றி சுவற்றில் பெரியார் மற்றும் அம்பேத்கர் புகைப்படத்தை மிக பெரிய ஓவியமாக வரைந்திருக்கிறார், இதனால் அப்பகுதியில் கலவரம் உண்டாகும் சூழல் உருவாகிவிட்டது, மாற்று சமுதாய மக்கள் சேர்ந்து அனைத்து மக்கள் வசிக்கும் பகுதியில் பெரியார் புகைப்படத்தை எப்படி வரையலாம் என்றும்..,

வளர்ப்பு மகளை திருமணம் செய்தவர், தமிழ் மொழியை விபசாரியுடன் ஒப்பிட்டு பேசிய பெரியார் எனும் ராமசாமியின் புகைப்படத்தை பள்ளியில் வரைவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழி குறித்தும், தமிழர்களின் கலாச்சாரம் குறித்தும் தவறுதலாக எண்ணம் தோன்ற வாய்ப்பு இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Loading...

அதனை அடுத்து அனுமதியின்றி வரையப்பட்ட பெரியார், அம்பேத்கர் புகைப்படங்களை காவல்துறையினர் வெள்ளை பெயிண்டை கொண்டு அளித்தனர், அம்பேத்கர் புகைப்படம் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் சாதிய அடையாளங்களை அம்பேத்கர் மீது திணித்ததால் அவரின் புகைப்படத்தையும் அழிக்க வேண்டிய சூழல் உருவானதாக காவல்துறையினர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில் தமிழக மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் இணையதள காலத்தில் பெரியார் முன்பு தமிழ் மொழியை கொச்சையாக பேசியது, இந்து மதத்தை தவறாக விமர்சனம் செய்தது, வளர்ப்பு மகளை சொத்து பறிபோய்விடும் என்ற காரணத்திற்காக திருமணம் செய்த தகவலை பலரும் வெளியில் சொல்லி வருவதால் பெரியார் குறித்த பல தகவல்கள் வெளிவருவதால் பெரியாரிஸ்ட்கள்.,

பெரியாரை தலைவராக கொண்டாடும் அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளனராம் , தருமபுரியில் ஏற்பட்ட நிகழ்வு போன்று தமிழகம் முழுவதும் உண்டானால் என்ன செய்வது என்ற அதிர்ச்சியில் உள்ளனராம் பெரியாரிஸ்ட்கள். மாற்றம் உண்டாகிவிட்டதோ??

©TNNEWS24

Loading...

Trending