தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்!

Loading...

முன்னாள் மத்திய அமைச்சரான தலித் எழில்மலை இன்று மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார்.

பாமகவின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று வாஜ்பாயின் மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை இணையமைச்சராகவும் அதிமுக சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் தலித் எழில்மலை.

Loading...

இவர் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாகாணாத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிறந்தார். இவர் ஆரம்பத்தில் ராணுவத்தில் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாக பங்கு பெற்றார் தலித் எழில்மலை. ராணுவ சேவைக்காக ஜனாதிபதியிடமிருந்து கே. சைனிக் சேவா பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொண்டர்கள் சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*