ஸ்டாலினுக்காக 108 தேங்காய் உடைத்த இந்து மக்கள் கட்சி ! கடும் கோபத்தில் திமுகவினர் எதற்காக?

திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் பொய்யாக பேசுகிறார் என்றும் அவருக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும் என்றும் இந்து மக்கள்கட்சி சார்பில் அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர்.

Loading...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேண்டுமென்றே பிரசாரம் செய்து வருவதாகவும் அவருக்கு நல்ல புத்தியைக் கடவுள்தான் கொடுக்க வேண்டும் என்றும் கோரி வேண்டுதல் செய்துள்ளனர் இந்து மக்கள் கட்சிப் பிரமுகர்கள்.

தூத்துக்குடியில் இருக்கும் அருள்மிகு “வேம்படி இசக்கி மாரியம்மன்” கோயிலில் 108 தேங்காய் உடைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக பிரத்யேக வேண்டுதலில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர் , அர்ஜுன் சம்பத் இந்த வேண்டுதலை முன்னின்று நடத்தியுள்ளார். 
வேண்டுதலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத்.,

Loading...

குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு நல்லது என்று நன்கு தெரிந்திருந்தும், மு.க.ஸ்டாலின் அதற்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார். பொய்ப் பிரசாரம் செய்கிறார். அந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது போல ஒரு தோற்றத்தை அவர் உருவாக்கி வருகிறார். அவருக்கு இறைவன்தான் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். அதற்காகவே இந்த சிறப்பு வழிபாடு என்று கூறினார்.

இந்நிலையில் திமுக வினர் இந்து மக்கள் கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், மேலும் தாங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்கள் நிலைமை என்னவாகும் என்றும் திமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர், அதற்கு ஏற்கனவே கோலம் போட்டு இந்து மதம் பக்கம் திரும்பிய நீங்கள் விரைவில் மாரியம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து பெரியார் கொள்கைக்கு விரைவில் மூடு விழா நடத்துங்கள் என இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*