Connect with us

#24 Exclusive

பட்டாக்கத்தியை சுழற்றியவாறு சீமானுக்கு கொலை மிரட்டல்: ஐந்து இளைஞர்கள் கைது!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஐந்து இளைஞர்கள் பட்டாக்கத்தி ஏந்தியவாறு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த கொலை மிரட்டல் நேரில் விடுக்கவில்லை என்பதும் டிக்டாக் செயலி வீடியோ மூலம் இந்த இளைஞர்கள் விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த சில மணி நேரங்களாக டிக்டாக்கில் நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐந்து இளைஞர்கள் குறித்த வீடியோ பயங்கர வைரலானது. அந்த இளைஞர்கள் பட்டாக் கத்தியை சுழற்றியவாறு சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து இது குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார் அந்த 5 இளைஞர்களை அடுத்த சில மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் இந்த மிரட்டலை அவர்களாகவே விடுத்தார்களா அல்லது வேறு யாரேனும் சொல்லி மிரட்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது இந்த வீடியோ டிக்டாக்கில் இருந்து நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

இந்த நிலையில் கொலை மிரட்டல், ஆபாசம் மற்றும் விரும்பத்தகாத வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் டிக்டாக் செயலியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending