Connect with us

அரசியல்

தமிழக இந்துக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி ஒன்று சேர்ந்து சாதித்த இந்துக்கள் !

Published

on

சென்னை.,

கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளம் ஒன்றில் மின் கட்டண பயனீட்டு அட்டையில் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த தனியார் ஜெபம் நிகழ்ச்சியை நடத்துபவரின் விளம்பரம் இடம்பெற்றிருந்தது.

அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் மின்சார அட்டையில் கிறிஸ்துவ நிறுவனத்தின் மதமாற்ற அறிவிப்பு விளம்பரம் இடம்பெற்றிருப்பது, இந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லை என்றால் கடும் விளைவினை சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதனை அடுத்து அந்த மின் கட்டண அட்டை குறித்த விசாரணைக்கு வேலூர் கோட்டத்துக்கு உட்பட்ட மின்சார அலுவலர் உத்தரவிட்டார். விசாரணையில் மின் பயனீட்டு அட்டையில் அரசாங்கம் அனுமதி இல்லாமல் பள்ளிகொண்டா மின்சாரவாரிய அலுவலகத்தில் பணிபுரியும் டேவிட் நெல்சன் எனும் அரசாங்க உத்தியோகத்தில் பணிபுரியும் நபரே இதனை செய்ததாக தெரியவந்துள்ளது.

இவர் விடுமுறை நாட்களில் தனியாக கிறிஸ்துவ அமைப்புகளுடன் சேர்ந்து மதத்தினை பரப்பும் செயலில் ஈடுபட்டுவந்ததும் விசாரணையில் அறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டேவிட் நெல்சன் (37) பணியிடை நீக்கம் செய்ததுடன் முழுமையான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையில் அனைத்து தகவல்களும் உறுதி செய்யப்பட்டால் பதவியினை தவறாக பயன்படுத்துதல், அரசாங்க பணியில் இருந்து கொண்டு மத பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களுக்காக பணி நீக்கம் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இந்து மக்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து மதப்பிரச்சாரம் செய்யும் நபரை இரண்டே நாட்களில் தக்க தண்டனை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற தண்டனைகள் பலருக்கும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

இது தமிழக இந்துக்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share