கொரோன தடுப்பு மருந்து ரெடி! மனிதன் உடலில் சோதனை செய்ய அனுமதி!!

கொரோன தடுப்பு மருந்து ரெடி! மனிதன் உடலில் சோதனை செய்ய அனுமதி!!

Loading...

கொரோன வைரஸ் தொற்று முதலில் சீனாவின் வூஹான் நகரில் தொடங்கி சீன முழுவதும் அதி வேகமாக பரவி தொடங்கியது, அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளான அமெரிக்கா பிரேசில், இந்தியா, ரஷ்ய ஆகிய உலக நாடுகளையும் இந்த கொரோன தொற்று விட்டுவைக்கவில்லை. தற்போது உலக நாடுகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்தநோய் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ ஆய்வாளர்கள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இந்த வைரஸை குணப்படுத்த புதிய மாத்திரைகளைக் மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் கொரோனாவை குணமாக்கும் மாத்திரையை பெவிபுளூ என்ற, பிராண்ட் பெயரில் மாத்திரை ஒன்றை தயாரித்துள்ளது.

Loading...

மற்றும் இதற்கான முறையான அங்கீகாரத்தை மத்திய அரசிடம் இருந்து நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மாத்திரைக்கான ஒரு அட்டை ரூ. 3,500/- என்றும் மற்றும் 200 மில்லி கிராம் எடை கொண்ட ஒரு மாத்திரையின் விலை ரூ. 103 என கிளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கோவேக்சின் என்கிற தடுப்பு

மருந்தை தயாரித்துள்ளது. இந்த கோவேக்சின் என்ற மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆகும். மற்றும் இவற்றை மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இவை வரும் ஜூலை மாதத்திலிருந்து உலக முழுவதும் இந்த மருந்தை மனிதர்களுக்கு பரிசோதிக்கும் ஆய்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியிட்டு உள்ளனர் என குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*