Connect with us

#24 Exclusive

ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு பெற்றோர்கள் மகிழ்ச்சி !

Published

on

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசுடம், தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி அளித்து மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Loading...

அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் அரசு தலைமை மருத்துவமனைகளை ஆதாரமாகக் கொண்டு, இந்த மருத்துவ கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியும் தலா 325 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. இதற்கு, மத்திய அரசு தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு தலா 130 கோடி ரூபாயும் வழங்க உள்ளன.

Loading...

கூடுதலாக 6 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமைவதால் மருத்துவ படிப்பை பயில விரும்பும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending