Connect with us

#24 Exclusive

2000 நோட்டில் ஜிப் இருப்பதை கேலி செய்தவர்களுக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு ! இனி பதுக்கல் நடைபெறுமா?

Published

on

2000 நோட்டில் ஜிப் இருப்பதை கேலி செய்தவர்களுக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு ! இனி பதுக்கல் நடைபெறுமா?

சென்னை :- நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களில் மட்டும் 24 இடங்களில், வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர், அதில் கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளும், வெளிநாட்டு பணங்கள் மட்டும், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்ற பட்டுள்ளது.

Loading...

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிகழ்வு, பணமதிப்பிழக்கம் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த அடுத்த நொடியில் இருந்து பல்வேறு இடங்களில் பணத்தினை பதுக்கிய, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், லஞ்சமாக சொத்து சேர்ந்த அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர், சிறிது காலத்தில் தங்களுக்கு நெருக்கமான வங்கியில் பணிபுரியும் அதிகாரிகளை பயன்படுத்தி, கமிஷன் தொகைக்கு பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொண்டனர்.

Loading...

மேலும் இதனை கொண்டே மத்திய அரசினை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தனர், நோட்டினை மாற்றியதால் எந்த பயனும் இல்லை என்றும், இதனால் சாமானிய மக்கள் மட்டுமே பாதிப்பு அடைந்ததாகவும் குற்றம் சுமத்தி வந்தனர், பெரும்பாலும் சாதாரண மக்களும் இதே கேள்வியை பல நேரங்களில் மத்திய அரசை நோக்கி எழுப்பினர்.,

ஒரு சில இடதுசாரிய சிந்தனை கொண்ட ஊடகங்களும் 2000 நோட்டில் ஜிப் இருக்கிறது, பதுக்காதீர்கள் என்று கேலி செய்தனர், ஆனால் தற்போது ஏன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்தோம், அதனால் என்ன பயன் என்பதை மத்திய அரசு அதிரடியில் காட்டி வருகிறது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பணத்தினை மாற்றிய வங்கி அதிகாரிகள் முழு விவரத்தையும் தனி படை கொண்டு அலசி ஆராய்ந்த மத்திய அரசு, அவர்கள் கொடுத்த தகவல் மூலம் நாடு முழுவதும் சட்டவிரோதமாக பணத்தினை மாற்றிய 2500 நபர்கள் பற்றிய முழு பட்டியலை தயார் செய்துள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 தொழிலதிபர்கள், கல்லூரி முதல்வர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள் என அதிரடியாக சோதனை செய்து பணத்தினை கைப்பற்றி வருகிறார்கள், சமீபத்தில் கல்கி சாமியார், உடல் எடை குறைப்பு நிலையம், ஜேபிஆர் கல்வி நிலையம் என தமிழகத்தில் மட்டும் இந்த பட்டியல் உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன் என்று கேலி கிண்டல் செய்தவர்களுக்கு தற்போது மத்திய அரசும், மோடியும் செயலின் மூலம் பதிலடி கொடுத்து வருவதாகவும், பணத்தினை பதுக்கிய அனைவரும் சிறை செல்வது உறுதி என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓ அதுதான் அந்த கட்சி தலைவர் தற்போது அடக்கி வாசிக்கிறாரா?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending