பாத்திமா அலி கேட்ட ஒற்றை கேள்வி கடைசிவரை வாய் திறக்காத தமிமுன் அன்சாரி ? CAA வை எதிர்க்கவே இல்லை என பல்டி !

தனியார் தொலைக்காட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது விவாதத்தை நெறியாளர் குணசேகரன் தொகுத்து வழங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், எம் எல் ஏ தமிமுன் அன்சாரி, எம் எல் ஏ தனியரசு, பாத்திமா அலி, ரமேஷ் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading...

பாத்திமா அலி மற்றும் தமிமுன் அன்சாரி இருவரும் விவாதத்தில் பங்கேற்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது, வழக்கமாக எப்போதும் விவாதங்களில் துணை கேள்வியை ஒரு தரப்பினரிடம் மட்டுமே கேட்கும் குணசேகரன் இந்த முறை பாத்திமா அலியை டார்கெட் செய்து நேரடியாக கேள்விகளை தொடுத்தார்,

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிமுன் அன்சாரியிடம் CAA வினால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என மத்திய அரசும் விளக்கம் கொடுத்துவிட்டது, முதலமைச்சரும் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டார் என்று கூறுங்கள் என கேட்கிறார் பிறகு ஏன் போராட்டம் என கேட்க அப்படியே தலைக்கீழாக விவாதத்தை மாற்றினார் அன்சாரி நாங்கள் CAA வை எதிர்க்கவே இல்லை, NPR மற்றும் NCR ஆகியவற்றை தான் எதிர்க்கிறோம் என கூறினார்.

Loading...

பிறகு ஏன் CAA வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்கிறீர்கள் என கேட்க பதிலை காணோம் இந்நிலையில் பாத்திமா அலியிடம் குணசேகரன் ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை இல்லை என அரசு சொல்லவேண்டும் என கேள்வி எழுப்ப, அதற்கு அவர் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்குத்தான் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

மதம் ரீதியாக துன்புறுத்தபடும் சிறுபான்மை மக்களுக்குத்தான் சலுகை எனவும் மத்திய அரசு வழங்கிய 4 முறைகளில் யார் வேண்டும் என்றாலும் விண்ணப்பித்து குடியுரிமை பெற்று கொள்ளலாம் என பதில் கொடுத்தார், இந்நிலையில் தமிமுன் அன்சாரி நாங்கள் இஸ்லாமியர்களுக்காக மட்டும் போராடவில்லை இலங்கை தமிழர்களுக்காகவும் போராடுகிறோம் என்றார்..

அப்போது குறுக்கிட்ட பாத்திமா இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தேவை பாதிப்பு என்றால் அவர்கள்தானே போராட வேண்டும் நீங்கள் ஏன் போராட வேண்டும் என தமிமுன் அன்சாரியை பார்த்து கேட்டதுடன் இப்படி போராட்டம் தொடர்ந்தால் கலவரம் உண்டனால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூற உடனடியாக கோவப்பட்ட தமிமுன் அன்சாரி நீங்கள் ஆர் எஸ் எஸ் உங்களால் தான் இந்த கலவரமே என ஒரே போடாக போட்டார்.

ஆனால் விவாதத்தின் கடைசி வரை இலங்கை தமிழர்கள் ஏன் போராட வரவில்லை, CAA வை எதிர்த்து எதற்காக நீங்கள் போராடுகிறீர்கள் என அவர் கேட்ட கேள்விக்கு நிகழ்ச்சி முடியும் வரை அவருக்கு பதில் கொடுக்கவில்லை எத்தனையோ வழிகளில் நெறியாளர் துணை கேள்விகளை எழுப்பினாலும் நான் இந்தியன் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை போராட்டம் எல்லாம் தூண்டி விடுபவை என அதிரடியாக பதிலடி கொடுத்தார் பாத்திமா.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2657 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*