ஏன் இளையராஜாவின் மகனை மதம் மாற்றினீர்கள்- ரசிகர்களின் தொடர் கேள்விகளால் கோபமான யுவன் மனைவி!

ஏன் இளையராஜாவின் மகனை மதம் மாற்றினீர்கள்- ரசிகர்களின்  தொடர் கேள்விகளால் கோபமான யுவன் மனைவி!

Loading...

யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஷாஃப்ரூன் நிஷாவிடம் ஏன அவரை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி விட்டீர்கள் என கேட்டுள்ளனர் ரசிகர்கள்.

இளையராஜாவின் இளையமகனான யுவன் ஷங்கர் ராஜா 2014 ஆம் ஆண்டு தனது தாயின் மறைவுக்குப் பின்னர் இந்து மதத்தில் இருந்து வெளியேறி இஸ்லாம் மதத்தை தழுவினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தனது பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஷாப்ஃப்ரூன் நிஷா என்ற ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்துகொண்டார். அப்போதும் அவரை திருமணம் செய்து கொள்ளதான் மதம் மாறியதாக சொல்லப்பட்டது.

Loading...

இந்நிலையில் அவர் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பல ரசிகர்களும் ‘ஏன் இளையராஜாவின் மகனை மதம் மாற்றினீர்கள்?’ எனக் கேட்க, அதற்கு அவர் ‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். மேலும் அவர் மிகப்பெரிய கேள்விகளுக்கான விடையை இஸ்லாமில் கண்டுகொண்டுள்ளார். எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசைகளால் நாங்கள் இணைந்திருக்கிறோம்.. ’ எனக் கூறினார்.

ஆனாலும் விடாத ரசிகர்கள் ‘இளையராஜா எவ்வளவு பெரிய கடவுள் நம்பிக்கையாளர்? அவர் மகனை இப்படி மாத்திடீங்களே?’ எனக் கேட்க ஒரு கட்டத்தில் கோபமான ஷாஃப்ரூன் நிஷா  ‘மக்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்?…. நான் வேண்டுமானால் அவருடைய நம்பிக்கை பற்றியும், அவர் ஏன் இஸ்லாமை தேர்வு செய்தார்? என்றும் நேரலையில் பேட்டி எடுக்கட்டுமா? அது உங்களுக்கு திருப்தி அளிக்குமா? ’ என தனது அதிருப்தியை வெளியிட்டார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*