Connect with us

#24 Exclusive

நடிகை ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்த விவகாரம்: திடுக்கிடும் திருப்பம்

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவகொண்டாவுடன், ‘கீதா கோவிந்தன் மற்றும் ’டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் ராஷ்மிகா கலந்து கொண்ட போது திடீரென ஒரு ரசிகர் அவரை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

ஆனால் இந்த சம்பவம் குறித்து ராஷ்மிகா தரப்பிடம் இருந்து எந்தவித கண்டனமும் குற்றச்சாட்டும் இல்லை. இந்த நிலையில் இந்த வீடியோவில் இருப்பது உண்மையில் ராஷ்மிகா இல்லை என்றும் அவர் ஒரு கன்னட நடிகை என்றும் அதுமட்டுமின்றி இது உண்மை சம்பவம் கிடையாது என்றும் ஒரு படபிடிப்பிற்க்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

Loading...

இதனால்தான் ராஷ்மிகா தரப்பில் இருந்து எந்தவித கண்டனமும் வரவில்லை என்று தெலுங்கு திரையுலகின் முன்னணி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக கருதப்படுகிறது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending