Connect with us

சினிமா

நடிகையிடம் ஆபாசமானக் கேள்வி – கூலாக பதில் சொல்லி ‘நோஸ்கட்’

நடிகையிடம் ஆபாசமானக் கேள்வி – கூலாக பதில் சொல்லி ‘நோஸ்கட்’

மலையாள நடிகையான சம்யுக்தா மேனனிடம் ரசிகர் ஒருவர் ஆபாசமானக் கேள்வி கேட்டு சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.

சமூகவலைதளங்களின் மூலம் திரைப் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். ஆனால் இதில் சில அசௌகர்யங்களாக ரசிகர்கள் அவர்களிடம் அத்துமீறுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக நடிகைகளிடம் ரசிகர்கள் ஆபாசமாகவும், அதிக பிரசங்கித் தனமாகவும் கேள்வி எழுப்புவது வாடிக்கையான ஒன்று.

Loading...

நடிகை சம்யுக்தா மேனன் தீவண்டி மற்றும் உயர போன்ற மலையாள படங்களின் மூலம் பிரபலமானவர். இவர் தமிழிலும் ஜூலை காற்றே என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் ரசிகர்களோடு சில தினங்களுக்கு முன்னர் லைவ் சாட் வந்தார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறினார். அதில் ஒரு ரசிகர் அவரிடம் ஆபாசமாக ‘நீங்கள் விர்ஜினா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

Loading...

அதற்கு சம்யுக்தா ‘விர்ஜின், செக்ஸ், ஆல்கஹால் போன்ற விஷயங்கள் பற்றி கேள்வி கேட்டால் இந்த காலத்து பெண்கள் பயந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்களா ? அல்லது இப்படி கேள்வி கேட்டால் மற்றவர்களிடம் இருந்து தனியாகத் தெரிவோம் என்று நினைக்கிறீர்களா?..  பார்த்து பத்திரமாக இருங்கள. யாரவது அடித்துவிட போகிறார்கள். நீங்கள் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Trending