குடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய நந்தினி காவல்துறை கவனிப்பு ! வேறு யாருக்கெல்லாம் தொடர்பு?

குடும்பத்துடன் போலிசெய்தியை பரப்ப களம் இறங்கிய நந்தினி காவல்துறை கவனிப்பு ! வேறு யாருக்கெல்லாம் தொடர்பு?

Loading...

மது ஒழிப்பு போராளி என கல்லூரி காலத்தில் அறிமுகமாகி பின்பு மோடி எதிர்ப்பு போராளியாக மாறி மோடியின் திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் நந்தினி என்ற பெண், அவரது தந்தை ஆனந்தன் அவரை அனைத்து இடங்களுக்கும் அழைத்து சென்று போராட்டத்தில் கலந்து கொள்ள துணையாக இருப்பவர்.

மேலும் அவருக்கு போராட கத்து கொடுத்ததும் அவர்தான் என கூறப்படுகிறது, இந்நிலையில் காரைக்குடியில் ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள நந்தினி அவரது தந்தையுடன் சென்றபோது அங்கு மோடியை தரக்குறைவாக பேச பாஜகவினர் சிலர் கவனித்து அனுப்பினர்.

Loading...

அதன் பிறகு பெரிய அளவில் எந்த போராட்டத்திலும் நந்தினி கலந்து கொள்ளவில்லை அதன் பிறகு ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைத்தார், இதற்கிடையில் போராட்டத்தை நடத்துவதற்கும் அவரது தந்தைக்கு துணையாக இருக்க அவரது தங்கையை வாரிசாக அறிமுகப்படுத்தினார்.

அவர் போராட்டம் ஒன்றும் பெரிய அளவில் எடுபடவில்லை இதனையடுத்து தற்போது மீண்டும் குழுவாக நந்தினி குழு களம் இறங்கியுள்ளது, இந்த முறை அவர்கள் எடுத்திருக்கும் அரசியல் கொரோனா, கொரோனா குறித்து உலக நாடுகள் தங்கள் மக்களை காப்பாற்ற கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் மிக பெரிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவின் நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது, ஆனால் நந்தினி குழுவினர் புதிதாக வீடியோ ஒன்றிணை வெளியிட்டுள்ளனர் அதில் இந்தியாவில் கொரோனா தாக்கம் இல்லை என்றும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நீக்கவேண்டும் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில் பலரும் நந்தினியின் பேச்சை நம்பி ஷேர் செய்துள்ளனர், உலகம் முழுவதும் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில் நந்தினி போன்ற கும்பல்கள் மக்களின் உயிருடன் அரசியலில் ஈடுபடுவது அதிர்ச்சியை அளித்துள்ளது, பலர் இன்றும் கொரோனா ஆபத்தை அறியாமல் வீதிகளில் வலம் வரும் நிலையில் இவர் கொரோனவால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படாது என பொய் தகவலை பரப்பினால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.

ஒரு வேலை மக்கள் வீதியில் நடமாட தொடங்கினால் நோய் தொற்று அதிகரித்து, உயிரிழப்புகள் அதிகரிக்கும்,இதனையடுத்து நந்தினியின் பொறுப்பற்ற பேச்சு குறித்து சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அவரை கைது செய்யவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது, காவல்துறை புகாரை பெற்றுக்கொண்டு கவனித்து வருவதாகவும் பொய் தகவலை பரப்பியது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நந்தினி அவரது குழுவினர் காவல்துறை பாத்ரூம் வாசலில் வழுக்கி விழுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று காவல்துறை முழுமையான விசாரணை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

©Tnnews24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*