இனி பேஸ்புக்கில் லைக் கவுண்ட் கிடையாது நிர்வாகம் திட்டவட்டம் ! என்ன காரணம்?

இனி பேஸ்புக்கில் லைக் கவுண்ட் கிடையாது நிர்வாகம் திட்டவட்டம் ! என்ன காரணம்?

Loading...

சமூகவலைத்தளம்.,

உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தலைங்களில் பேஸ்புக் முன்னணியில் உள்ளது. உலகில் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். பேஸ்புக் மக்களிடையே லைக் பட்டன், ஷேர் ஆகியவற்றின் மூலமே பிரபலமடைந்தது.

Loading...

பேஸ்புக் உருவான காலகட்டத்தில் இருந்து பல்வேறு மாற்றங்கள் பேஸ்புக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன, குறிப்பாக வெறும் லைக் பட்டன் மட்டும் இருந்த பேஸ்புக் அதில் மாற்றங்கள் கொண்டுவந்து ரியாக்ட் ஆப்சனையும் கொண்டுவந்தது, ஆனால் தற்போது மேலும் ஒரு மாற்றத்தை பேஸ்புக் உலகம் முழுவதும் செய்ய இருக்கிறது.

ஆம் இனி நீங்கள் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோ, ப்ரொபைல் போட்டோ, உள்ளிட்ட எந்த பதிவிற்கும் எத்தனை நபர்கள் லைக், ரியாக்ட் செய்திருக்கிறார்கள் என்று இனி பேஸ்புக் காட்டாது, இதுவரை பேஸ்புக்கில் லைக் வாங்குவதற்காக மட்டும் இந்தியாவில் மட்டும் 1200 நபர்களுக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள்,

மேலும் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள், சமீபத்தில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பள்ளி சிறுவர்கள் இருவர் யார் அதிக லைக் வாங்குகிறார்கள் என்ற போட்டியில், தோல்வி கண்ட சிறுவன் ஷர்வன் தற்கொலையே செய்துகொண்டுள்ளான்.

இதுபோன்ற விபத்துக்களை தடுக்கவும், பதிவுகளின் தரத்தை லைக் தீர்மானிப்பதை மாற்றவும் பேஸ்புக் நிர்வாகம் இந்த அதிரடி மாறுதல்களை செய்துள்ளது, தற்போது சோதனை அளவில் பரிசோதிக்கப்பட்ட இந்த திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து உலகம் முழுவதும் மாற்றத்தை கொண்டுவர பேஸ்புக் முடிவெடுத்து அறிவித்துள்ளது.

இனிமேல் லைக் வாங்குவதற்காக போடப்படும் பதிவுகள், போலி செய்திகள் உள்ளிட்டவை குறையும் என்றும் நம்பலாம்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*