மனக்குமுறலை வெளிப்படுத்திய பாண்டே ! சரியான நேரத்தில் சரியான விளக்கம்.

சென்னை :- நாடு முழுவதும் குடியுரிமை மசோதா நிறைவேற்ற பட்டதற்கான நோக்கம் என்னவென்று பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு வழியில் தகவலை மக்களுக்கு சொல்லி வருகின்றனர். ஒரு சில அரசியல் கட்சிகள் வழக்கம்போல் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும் தகவலை மாற்றி கூறிவருவதாக குற்றசாட்டுகள் எழுந்துவருகின்றன.

Loading...

இந்த சூழலில்தான் குடியுரிமை மசோதா ஏன் தேவை என்பதனை அசாம் மாநிலம் உணர்த்துவதாக பலரும் அதிர்ச்சி அடையும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன, காஷ்மீர் மாநிலத்தை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இராணுவம் குவிக்க காரணம் அங்கு மற்ற மாநிலங்களை விட இந்துக்கள் எண்ணிக்கை குறைவு என்றும் முஸ்லீம் மக்கள் தொகை மற்ற மாநில சராசரியை விட சற்று அதிகம் என்பதே முழு காரணம் என இந்து அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

மற்ற மாநிலங்களும் காஷ்மீர், அசாம் போன்று மாறிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் குடியுரிமை மசோதா நிறைவேற்ற பட்டுள்ளதாகவும் இது இந்தியாவின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் என்று வலதுசாரிய சிந்தனை கொண்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஏன் குடியுரிமை மசோதா தேவை என்று எளிமையான முறையில் விளக்கியுள்ளார்.

Loading...

மேலும் சரியான தரவுகளை ஆராய்ந்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டியையும் இணைத்து, சரியான விளக்கத்தை கொடுத்துள்ளார் பாண்டே என்றும் பலரது மனக்குமுறல்களை பாண்டே வெளிப்படுத்தும் இருப்பதாகவும் ஆளுக்கு ஒரு தகவலை பரப்பி வரும் வேலையில் சரியான நேரத்தில் சரியான விளக்கத்தை பாண்டே அளித்திருப்பதாவும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*