எதிர்பார்ப்பு!! தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமல்!!

எதிர்பார்ப்பு!! தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமல்!!

Loading...

தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, இதனை கட்டுப்படுத்த தமிழகம் கடந்த மார்ச் மாதம்
முதல் ஜூன் 30 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் அதில் உயிரிழந்துள்ளார்கள்37 பேர், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் அதிகம் கொரோன தொற்று பதிவாகி உள்ள சென்னை மாவட்டங்களில் மட்டும் ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. இதில் சென்னையில் மொத்த எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான சென்னை மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 12 நாட்களுக்கு முழு தீவிர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு காவல்துறைக் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

Loading...

சென்னை மாவட்டம் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் நபர்கள் மூலம் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது, இந்நிலையில் இதுதவிர மதுரை, வேலூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை மூலம் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவது அல்லது தமிழகம் முழுவதிலுமே ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுஉள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*