ஊடரங்கு முழுவதும் பப்ஜி விளையாட்டு! 16 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

ஊடரங்கு முழுவதும் பப்ஜி விளையாட்டு! 16 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

Loading...

ஈரோட்டில் பப்ஜி விளையாடிக் கொண்டு இருக்கும்போதே சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம்,கமலா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர், சதீஷ்குமார். பாலிடெக்னிக் படித்து வரும் சதீஷ் ஆன்லைன் விளையாட்டான பப்ஜியில் பெரிதும் ஆர்வம் கொண்டவர் என சொல்லப்படுகிறது. இப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் எப்போதும் மொபைல் போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இது குறித்து பல முறை பெற்றோர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

Loading...

இதனால் வீட்டில் விளையாடாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் உள்ள மாட்டுச் சந்தை திடலில் உட்கார்ந்து பப்ஜி விளையாடியிருக்கிறார். அவ்வாறு விளையாடிக் கொண்டு இருக்கும்போதே, மயங்கி விழுந்த சதீஷை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியாக, அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் நண்பர்கள். ஈரோடு அரசு மருத்துவமனையில் சதீஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதைக் கேட்ட சதீஷின் பெற்றோர் மருத்துவமனை வளாகத்திலேயெ கதறி அழ ஆரம்பித்துள்ளனர்.

தனது வயதை விட அதிக உடல் எடையுடன் காணப்பட்ட சதீஷ், மாரடைப்புக் காரணமாக இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்த போதும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் உண்மை என்னவென்பது தெரியவரும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*