என்னயா பெரியார் பின்பே ஓம் விநாயகர் கொண்டுவந்துவிட்டார்கள் கதறும் வீரமணி கண்டுகொள்ளாத திமுக

என்னயா பெரியார் பின்பே ஓம் விநாயகர் கொண்டுவந்துவிட்டார்கள் கதறும் வீரமணி கண்டுகொள்ளாத திமுக

என்னயா பெரியார் பின்பே ஓம் விநாயகர் கொண்டுவந்துவிட்டார்கள் கதறும் வீரமணி கண்டுகொள்ளாத திமுக !

பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகம் செய்துள்ள ஏற்பாட்டை கண்டித்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார், திராவிட கழகத்தலைவர் வீரமணி, ஆனால் இதனை திமுக கண்டும் காணாமல் இருப்பதாக பெரியாரிஸ்ட்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

Loading...

கடந்த 24.10.2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற 19 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன் பழகன், கேரள முன்னாள் ஆளுநர் சதா சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுட லாக நடந்தன; இதில்தான் இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது

Loading...

தொடர் போராட்டம்! விழாவிற்கான அழைப்பிதழில் பேரா சிரியர்கள், ஆட்சி பேரவை உறுப்பி னர்கள், ஆசிரியர் அல்லாத பணியா ளர்கள் அனைவரையும் விட்டு விட்டு அச்சடித்தலில் தொடங்கியது சர்ச்சை. இப்பொழுது பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அனைவரையும் விட்டு விட்டு அழைப் பிதழ் அச்சடித்திருப்பது வேதனைக்குரிய ஒன்றாகும். ஏனென்றால் பட்டமளிப்பு விழாவிற்கான பட்டச் சான்று தயார் செய்தல் முதல் பட்டமளிப்பு விழாவிற் கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனிப்பது இவர்கள்தான்; இவர்களைப் புறக்கணித்ததால் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் பட்ட மளிப்பு விழா வேலைகள் நடந்து முடிந்த வுடன் யாரும் உணவருந்த செல்லாமல் புறக்கணித்தனர்

தந்தை பெரியார் சிலைக்குப் பின்புறமாக சீரியல் விளக்கு அலங்காரத்தில் ஓம் , திரிசூலம், விநாயகன் உருவங்கள்

பெரியார் சிலைக்குப் பின்னணியில் பிள்ளையார் சிலையா?

பணியாளர்கள்தான் புறக்கணிக்கப் பட்டனர் என்று பார்த்தால், யார் பெயரில் பல்கலைக்கழகம் இயங்குகிறதோ அந்த தந்தை பெரியாரின் படத்தைக் கூட அழைப்பிதழில் போடாமல் புறக்கணிக்க வைத்த சக்தி எது என்று ஆராய வேண் டியுள்ளது மட்டுமல்லாமல், பெரியார் சிலைக்குப் பின்னணியில் பிள்ளையார் சிலை, ஸ்வஸ்திக் சின்னம், சூலாயுதம் ஆகிய சின்னங்களை வண்ண விளக்கு கள் (சீரியல் பல்பு) மூலம் இடம் பெறச் செய்தது ஏதோ தெரியாமல் செய்தது அல்ல!

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி எந்த மக்கள் பிரதிநிதியும் இல்லாத எச்.ராஜா, துணைவேந்தர் இல்லாத நிலையில் துணைவேந்தர் அறைக்குள் பா.ஜ.க. பிரதிநிதிகள் 19 பேர், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி, ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியும், ஆட்சிக்குழு உறுப்பினருமான குமார சுவாமி ஆகியோருடன் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை நடத்தியது அப்போதே பலத்த சர்சையை கிளப் பியது.

சேலத்தில் பெரியார் பெயரில் பல் கலைக் கழகம் – ஆனால், அங்கு நடப் பதோ ஆர்.எஸ்.எஸ். கூத்து – வெட்கக்கேடு!

புதிய துணைவேந்தர் வந்ததற்குப் பிறகு மோசம்!

புதிய துணைவேந்தர் வந்த பின், மதச்சார்பற்ற நிலையில் இயங்கி வந்த பெரியார் பல்கலைக் கழகத்தின் வடிவம் மாற்றப்பட்டு வருகிறது. துணைவேந்தர் அறையில் திடீரென சரஸ்வதி படம் பெரிய அளவில் மாட்டப்பட்டுள்ளது.

அண்ணா பெயரில் தி.மு.க.வையும் இணைத்துள்ள அண்ணா தி.மு.க. ஆட் சியில், தந்தை பெரியார் அவமதிக்கப் படுவது வெட்கக்கேடு!

இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து விளக்கம் தேவை. ஆர்.எஸ்.எஸ். கூடா ரமாக இருந்துவரும் பெரியார் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல், இதனை மக்கள் பிரச்சினையாக வீதிக்குக் கொண்டு வரும் வகையில் முதற்கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்!

திருந்த மறுத்தால் பல்வேறு- அனைத் துக் கட்சிகள் ஒருங்கிணைந்த போராட்டங்களும் தொடரக்கூடும். பெரு நெருப் புடன் விளையாடாதீர் – பெரியாருக்கு அவமரியாதையா – பொறுக்க முடியாது!

இவ்வாறு வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார், இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோல்வி பெற இந்து மத எதிர்ப்பே காரணம் என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் தற்போது இதுகுறித்து கண்டும் காணாமல் திமுக ஒதுங்கிவிட்டதாம் !

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *