இங்கிலாந்து இளவரசரே சொல்லிட்டாரா கதறும் மதமாற்றம் கும்பல் !!

கிறிஸ்துவ மதம் உலகம் முழுவதும் பரவ காரணமாக இருந்த இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் பேச்சு, இந்தியாவின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை குற்றம் சுமத்தி மதம் மாற்றும் செயல்களில் ஈடுபட்டோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading...

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இந்தியா குளோபல் வீக்’ என்னும் இந்திய உலகளாவிய வார உச்சி மாநாடு நடந்தது, இதில் அந் நாட்டின் இளவரசர் சார்லஸ், வீடியோ கான்பரன்ஸ் வழியாக பங்கேற்று பேசினார். அப்போது அவர்,

இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை கலாச்சார பண்பாட்டை பாராட்டி பேசினார் மேலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என பேசியது எதிர்காலத்தில் உலகை ஆளும் நிலையான சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என கருதி பேசியதாக கூறப்படுகிறது.

Loading...

மேலும் பேசியவர் தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், உலகில் நிலையான எதிர்காலத்தை கொடுக்க இந்தியாவின் பங்களிப்பு முக்கியம் என பேசியதாகவும் குறிப்பிட்டார், அத்துடன் யோகா உலகிற்கு இந்தியா கொடுத்த பரிசு எனவும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இந்தியாவை புகழ்ந்தது மட்டுமல்லாமல் இந்தியாவில் யோகா ஒரு மதத்தின் அடையாளம் என கிறிஸ்தவ மிஷனரிகள் கூறிக்கொண்டு இருக்க, இங்கிலாந்து இளவரசரோ யோகா உலகிற்கு இந்தியா கொடுத்த கொடை என பாராட்டி தலையில் கல்லை தூக்கி போட்டுவிட்டார்.

அத்துடன் இனி நிலையான எதிர்காலம் இந்தியாவின் கையில் என கூறியதும் அது குறித்து பிரதமர் மோடியுடன் பேசியதாக கூறியது மோடி எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இங்கிலாந்து இளவரசரே யோகா உலகிற்கு இந்தியா கொடுத்த பரிசு என கூறிவிட்டாரா இனி யோகா மீது மதமுத்திரை சர்வதேச அளவில் எப்படி குத்துவது என மதமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மிஷினரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3949 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*