ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் – பதற்றத்தில் இங்கிலாந்து!

ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் – பதற்றத்தில் இங்கிலாந்து!

Loading...

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.தற்போது அமெரிக்காவிலேயே அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இங்கிலாந்தில் இந்த நோய்த்தாக்கம் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கு இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக வேலைகளை செய்து வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை என்பதால் தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

நேற்று அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த செய்தியானது அந்த நாட்டு மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. கொரோனாவால் இதுவரை இங்கிலாந்தில் 51000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*