இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மாட்டோம் – ஜோ ரூட் கருத்துக்கு என்ன காரணம் !

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மாட்டோம் – ஜோ ரூட் கருத்துக்கு என்ன காரணம் !

Loading...

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இலங்கை வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சுறுத்தி வரும் வேளையில் கிரிக்கெட்டிலும் இதன் தாக்கம் அதிகமாகியுள்ளது. சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரின் போது இங்கிலாந்து வீரர்களுக்கு காய்ச்சலும், உணவுக்குழல் பிரச்சனைகளும் வந்து வாட்டின.

Loading...

அதையடுத்து தற்போது இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. வரும் 19 ஆம் தேதி தொடங்க இருக்கும் முதல் போட்டியின் போது இலங்கை வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, ஒருவருக்கு ஒருவர் தொட்டுக் கொள்வதை குறைத்துக் கொள்ள முடிவு எடுத்துள்ளோம். கைகுலுக்குவதற்கு பதிலாக கையை மடக்கி, லேசாக முட்டிக் கொள்ள இருக்கிறோம். சீரான இடைவெளியில் கை கழுவி. பாக்டீரியா, கிருமிகள் பரவுவதை தவிர்க்கும் வகையில் எங்களது மருத்துவ குழு இந்த அறிவுரை வழங்கியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*