மின்கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது! ட்விட்டரில் பிரபல இயக்குனர் அதிருப்தி..

மின்கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது! ட்விட்டரில்
பிரபல இயக்குனர் அதிருப்தி..

Loading...

தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில், மக்கள் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இந்த ஊரடங்கு காரணமாக மின்சார கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது தமிழகத்தில் ஒரு சில விதி நெறிமுறைகளின் படி ஊரடங்கில் தளர்வுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் மின்வாரிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது எடுக்கப்படும் மின்வாரிய

கணக்கெடுப்பின் மின்கட்டணம் இதுவரை ஒரு மாதம் கட்டிய தொகையிலிருந்து, இரண்டு மூன்று மடங்காக மின்கட்டணம் வந்திருக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மற்றும் இந்த மின்கட்டணம் குறித்து முதலில் நடிகர் பிரசன்னா வீட்டில் மின்வாரிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட போது 70 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாகவும், மற்றும் இது பகல்கொள்ளையாக இருப்பதாகவும் நடிகர் பிரசன்னா மின் வாரியத்தின் மீது பெரும் குற்றசாட்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மற்றும்

Loading...

மின்கட்டணம் உயர்வு குறித்து தற்போது நடிகை கார்த்திகா, டாப்ஸி, ஹூமா குரேஸி உட்பட பலர் இதே புகாரை தெரிவித்து வருகின்றன, மற்றும் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தமிழக அரசு ஊரடங்கு நீட்டிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மின் கட்டணம் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்றும் , இதற்கு இருப்பினும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது, இந்த மின்கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசத்தை ஜூலை மாதம் 31-ம் தேதி

வரை நீட்டிக்க கோரி வழக்கறிஞர் சி.ராஜேஷ் என்பவர் வழக்கு ஓன்று தாக்கல் செய்து உள்ளார், இந்நிலையில் தற்போது மின்கட்டணம் உயர்வு குறித்து பிரபல இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார், அவை : ஊரடங்கு நேரத்தில் வேலையின்றி உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற மின்கட்டணம் உயர்வு விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது என்றும், வீட்டுக்கு

வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்? என்றும் இந்த சூழ்நிலையில் தான் அரசு மின்கட்டண குறித்து தளர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளரர். இயக்குனர் சேரன் ட்விட்டர் பதிவுக்கு பலர் தரப்பில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*