மீண்டும் பழிவாங்கப்பட்ட பாண்டே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததுதான் காரணமா?

தமிழக ஊடக துறையில் முன்னணி பத்திரிகையாளர்களில் ஒருவராக இருப்பவர் பாண்டே, பிரபல தொலைக்காட்சியில் இருந்து விலகிய பின்பு சிறிது காலங்கள் காத்திருந்து அதன் பிறகு சாணக்யா என்ற இணைய ஊடகத்தை நடத்தி வருகிறார், மேலும் அதனை சாட்டலைட் ஊடகமாக மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் பாண்டே.

Loading...

இந்நிலையில் பாண்டேவின் சாணக்யா சார்பில் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது, விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கைகளில் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு தலா ஒரு லட்சம் சாணக்யா நிறுவனம் சார்பில் கொடுக்க ஏற்பாடு செய்யபட்டது.

இதற்கான அழைப்பிதழ் சிறப்பு விருந்தினர்கள் மூவரையும் கேட்டு அவர்கள் உறுதி அளித்ததன் அடிப்படையில் அச்சடிக்கப்பட்டு அழைப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டது, இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு தனது திட்டங்கள் குறித்தும், அரசியல் நகர்வுகள் குறித்தும் பேசியிருந்தார்.

Loading...

அரசியலில் வெற்றிபெற அலை என்பது மிகவும் முக்கியம் எனவும் தான் புள்ளி வைத்துள்ளேன் அது சூழலாக மாறிவருவதாகவும் விரைவில் அது சுனாமியாக மாறுவது ஆண்டவன் கையிலும் மக்கள் கையிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார், இந்நிலையில் ரஜினியின் நேற்றைய பேச்சு கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னால் இதனால் ஏற்பட்ட சம்பவங்கள் தான் அதிர்ச்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, விழாவிற்கு வருவதாக இருந்த நல்லகண்ணு திடீர் என விருதுவழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தார் என்ன காரணம் என குறிப்பிடவில்லை, மேலும் நல்லகண்ணு விழாவை புறக்கணித்த செய்தியை திமுக ஆதரவு ஊடகம் முக்கிய செய்தியாக வெளியிட்டது.

இந்நிலையில் இதன் பின்னணியில் திமுக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது, முன்பு பாண்டே பிரபல தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதற்கு காரணமாக கூறப்பட்டதன் பின்னணியிலும் திமுகவின் பெயர் அடிபட்டது, தற்போது ரஜினியின் அரசியல் நகர்வுகள் செயல்பாடுகள் குறித்து பாண்டே பேசி வருவதன் காரணமாக மீண்டும் பண்டேய்விற்கு அழுத்தம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவேதான் அடுத்த வாரம் நடைபெறவிருந்த நேரலை நிகழ்வை பாண்டே ரத்து செய்துவிட்டு மறு ஒளிபரப்பு செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது, இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி மீது கொடநாடு எஸ்டேட் கொலை விவகாரத்தில் பழியை போட்ட பொய் செய்தியை பாண்டே தனது சாணக்யா ஊடகத்தில் முழு செய்தியாக வெளியிட்டு உண்மையை உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்பு எந்த வழியில் அழுத்தம் கொடுக்கப்பட்டதோ அதே வழியில் மீண்டும் திமுக சார்பில் முக்கிய நபர்கள் துணையுடன் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம், நல்லகண்ணு பங்கேற்காதது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை இதற்கு உதாரணமாக கூறுகின்றனர், ஆனால் இவை எதைப்பற்றியும் கவலை படாமல் பாண்டே தனது பணியை செய்வார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*