Connect with us

#24 Exclusive

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குமா? தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் பரபரப்பு

தொகுதி மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் அதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுக தாக்கல் செய்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

அப்போது தொகுதி வரையறை செய்யப்படாத 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தொகுதி மறு வரையறை செய்த பின்னரே மொத்தமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது

Loading...

இதனை அடுத்து டிசம்பர் 27 மட்டும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி வேட்பாளரும் தயார் நிலையில் இருக்கும் போது திடீரென சற்று முன்னர் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

Loading...

இந்த அறிவிப்பால் இன்று காலை 10 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பின்னரே வேட்புமனு தாக்கல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிகிறது

Loading...

Trending