Connect with us

#24 Exclusive

தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு, இதுதான் அதிகாரபூர்வ தேர்தல் முடிவு !

Published

on

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று தொடங்கி இரவுமுழுவதும் எண்ணப்பட்டு தற்போது இன்று பகலிலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் வெற்றி இலக்கை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றன.

உள்ளாட்சி பகுதிகளில் கட்சி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு மக்களை தயார் செய்யமுடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை முக்கிய காரணியாக பயன்படுத்தி 2021 ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தங்களுக்கு. ஆதரவான அடித்தளத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளும், அந்த வகையில் பெரும்பாலான ஊரக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றனர்.

Loading...

இந்நிலையில் ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு முடிவுகளை அறிவித்து வருகின்றன மக்களும் எதனை கருத்தில் கொள்வது என தெரியாமல் இருந்துவரும் சூழலில் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ பூர்வமாக முடிவுகளை அறிவித்துள்ளது, இதனை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அதன் விபரங்கள் பின்வருமாறு :-

Loading...

மாவட்ட கவுன்சிலருக்கான பதவியில் 180 இடங்களில் திமுக+103 இடங்களிலும், அதிமுக+69 இடங்களிலும், மற்றவை 8
இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.இதில் திமுக 94, இந்திய கம்யூ., 7, காங் 1, மார்க்சிஸ்ட் 1 இடங்களிலும் அதிகாரப்பூர்வமான வெற்றி பெற்றுள்ளது. 5090 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில்
திமுக+ 1692, அதிமுக+ 1,376
இடங்களிலும் வெற்றி பெற்றன.மற்றவர்கள் 536 இடங்களில் – வெற்றி பெற்றுள்ளனர் என தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.

இதுவரை திமுக கூட்டணியில் போட்டியிட்ட முக்கிய கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்தில்கூட வெற்றிபெறாதது விசிக தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது, மேலும் அதன் செய்தி தொடர்பாளர்கள் விவாதங்களில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எதிர்தரப்பினர் 0 என்று விமர்சனம் செய்வதாகவும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending