Connect with us

#24 Exclusive

என்ன தப்பு’ ரவீந்திரநாத்திற்காக வரிந்து கட்டி செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய எடப்பாடி !

‘என்ன தப்பு’ ரவீந்திரநாத்திற்காக வரிந்து கட்டி செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய எடப்பாடி !

சென்னை :- துணை முதல்வர் பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் அவருடன் அவரது மனைவி சொந்த செலவில் அமெரிக்கா சென்றுள்ளார். உடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமாரும் உடன் சென்றிருக்கிறார்.

அமெரிக்காவில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிற்கு ‘தங்கத்தமிழ்மகன் ‘ விருது கொடுக்கப்பட்டது, மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ் கலந்துகொண்டு சிறப்பித்துவருகிறார். இந்நிலையில் ஓ பி ரவீந்திரநாத் அமெரிக்காவில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது பாரத தேசத்தில் இருந்து வந்திருப்பதாகவும், மோடியின் மண்ணில் இருந்து வந்திருப்பதாகவும் பெருமிதத்துடன் பேசினார்.

Loading...

அப்போது கூட்டத்தில் ஆரவாரம் எழுந்தது, இதனை மேற்கோள்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த எடப்பாடி அவர் பேசியதில் என்ன தவறு அமெரிக்கர்கள் இந்தியா வந்தால் அமெரிக்காவில் இருந்து வந்ததாகத்தானே சொல்வார்கள், மேலும் மோடியின் மண்ணில் இருந்து வந்தேன் என்று அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Loading...
Loading...

Trending