வெளிப்படையாக வெடித்தது எடப்பாடி ராஜேந்திரபாலாஜி மோதல் !

கொரோனா பாதிப்பில் உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழலில், ஒரு பக்கம் அரசியல் விளையாட்டுகளும் அரங்கேறிவருகின்றன, ஆனால் கொரனோ யுத்தத்தில் பல உள்ளடி அரசியல் நிகழ்வுகள் வெளியில் தெரியாமலே மறந்துவிடுகின்றன.

Loading...

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது, அதற்கு பத்திரிகையாளர் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறினாலும், ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் அவருக்கு தனிச்செல்வாக்கை கொடுப்பதுடன், இந்து மதம் அமைப்புகள், பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்டோரின் அன்பை பெற்றார்.

மேலும் ஊடகங்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பதனையும் ராஜேந்திரபாலாஜி கற்றுக்கொண்டார், அதனால்தான் தன்னை தவிர அதிமுகவில் வேறொரு முகம் ஊடகங்களில் முன்னிலை படுவதை எடப்பாடி விரும்பவில்லை என்றும், இதற்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதல் விமர்சனத்தை காரணம்காட்டி பதவியில் இருந்து நீக்கியிருப்பதாகவும் அதற்கு ராஜேந்திர பாலாஜி பதிவிட்ட ட்விட்டர் பதிவினை காரணம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading...

இதுவரை சுமுகமாக போன எடப்பாடி ராஜேந்திர பாலாஜி மோதல் நேரடியாக வெடித்துள்ளது, மாவட்டம் செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கிய பின்பு நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை, அவரது சென்னை இல்லத்திலேயே தங்கி இருந்தார், அதன் பிறகு முதல்வர் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுவரை பொறுமையாக இருந்த ராஜேந்திர பாலாஜி இன்று காலை பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் உறுப்பினர்கள் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர் அவரும் கொடுத்திருக்கிறார், ஆனால் திடீர் என கொங்கு மண்டலத்தை சேர்ந்த மற்றொரு அமைச்சரிடம் இருந்து அவர்களுக்கு போன் போக திடீரென முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பால் விற்பதற்கான நேரத்தை குறைக்கவும், சில்லறை வணிகத்தை குறைக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரை அனைத்து விஷயத்திலும் பொறுமை காத்து வந்த அமைச்சர் தனது அமைச்சரவைக்குள் வரும் பிரச்னையை கூட என்னை அணுகவிடாமல் செய்தது ஏன் என நேரடியாக இரண்டு அமைச்சர்களையும் வாங்கு வாங்கு என வாங்கி இருக்கிறார், இது அம்மா ஆட்சி ஓவராக ஆடாதீர்கள் எப்போது என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது என கொந்தளித்திருக்கிறார்.

அதன் பிறகு அவரை சில மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள், இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் ராஜேந்திர பாலாஜி நடந்த உண்மைகள் குறித்து பொது வெளியில் கூறலாம் எனவும் ஆனால் தற்போது சொன்னால் முக்கியத்துவம் பெறாது என்பதால் பொதுவான நேரம் பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடகங்கள் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டபோது அவரது உதவியாளர் அமைச்சர் வேறொரு நாளில் உங்களை சந்திப்பார் என்று மட்டும் தெரிவிக்கின்றார் எனவே விரைவில் பல உண்மைகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*