வெளிப்படையாக வெடித்த எடப்பாடி விஜயபாஸ்கர் மோதல் அடுத்த பதவி பறிப்பு? என்ன நடக்கிறது அதிமுகவில்?

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரு பக்கம் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், மறுபக்கம் அரசியலும் அதை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Loading...

இதற்கு அதிமுகவில் சமீபத்திய இரண்டு தகவல்களை உதாரணமாக சொல்லலாம் அப்படி ஒன்றுதான் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நீக்கப்பட்டது, இதுகுறித்து என்ன நடந்தது என நாம் முன்பே செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.

தற்போது மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது, கொரோனா பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் படுவேகமாக இயங்கி வந்தார், இதுவரை அதிமுகவை விமர்சனம் செய்துவந்த பலரும் விஜய பாஸ்கரின் செயல்பாட்டினை பாராட்டி நன்றி தெரிவித்து வந்தனர்.

Loading...

மேலும் அவரது ட்விட்டர் பதிவுகளும் பெரிய அளவில் பகிரப்பட்டன, இந்த சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி விஜயபாஸ்கர் இருவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நேரடி மோதல் நிகழ்ந்துள்ளது, அப்போது இனி ஊடகத்தை சந்திக்காதீர்கள் அதுகுறித்து சுகாதார செயலாளர் பார்த்து கொள்வார் நீங்கள் டெண்டர் பணியை பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

சற்று அதிர்ச்சி அடைந்த விஜயபாஸ்கர் அப்போது ஏன் பணியை செய்தால் பாராட்டு வருவது குற்றமா இது ஒரு தவறா, ஏற்கனவே கட்சியின் பல சீனியர்களை நீங்கள் ஓரம்கட்ட நினைத்ததும், அதன்படி ஊடகத்தை சந்தித்த ராஜேந்திரபாலஜியை நீக்கியதும் அனைவருக்கும் தெரியும் இது உங்கள் ஆட்சியில்லை அம்மாவுடையது, கூவத்தூரில் இந்த ஆட்சியை காப்பாற்றிய பொறுப்பு எனக்கும் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

அதன் பிறகு வெளியே வந்தவர் நேரடியாக தனது வீட்டிற்கு செபெற்றுவிட்டார் இதனையடுத்துதான் நேற்று இரவு தன்னைப்பற்றி பாராட்டி யாரும் மீம்ஸ் போடவேண்டாம் என்று கூறியிருக்கிறார், இதனையடுத்து நேற்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தியுள்ளார், இந்த தகவலும் வெளிவரக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.

அதன்பிறகு அவர் தேனி புறப்பட்டு சென்றுவிட்டார், நிலைமை இவ்வாறு இருக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரும் தன் பங்கிற்கு கொந்தளித்துள்ளதார், அமைச்சராக இருந்து என்ன பயன் இவர் என்ன அம்மாவா அவர்கள் ஆட்சியில் கூட துறை ரீதியான தகவலை அமைச்சர்கள்தான் வெளியிடுவோம், ஆனால் இவரே அனைத்துத்தகவலை சொல்லுவேன் என கூறுகிறார் இதில்கூட அரசியலா என வேதனைப்பட்டுள்ளார்.

சுருக்கமாக சொல்லப்போனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை மற்றுமொரு ஜெயலலிதாவாக நினைத்து இவ்வாறு செயல்படுவதாகவும் விரைவில் தேர்தல் நேரத்தில் கடுமையான எதிர்வினை மூத்தநிர்வாகிகள் தரப்பில் வெளியாகலாம் எனவும் அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இருப்பார் என கூறப்படுகிறது.

விரைவில் விஜயபாஸ்கரின் இலாகா மாற்றப்படலாம் எனவும் அல்லது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் போன்று பதவி பறிக்கப்படாலம் என்று கூறப்படுகிறது. இதுதான் கடந்த இரண்டு நாட்களாக விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்காததன் பின்னணியா?

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*