மோடியை போல எடப்பாடி பழனிச்சாமி – தொலைக்காட்சியி இரவு 7 மணிக்கு !

மோடியை போல எடப்பாடி பழனிச்சாமி – தொலைக்காட்சியி இரவு 7 மணிக்கு !

Loading...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 7 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ தாண்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 536 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் சிகிச்ச்சை அளித்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கில் முதல் நாள் இன்றோடு முடிந்துள்ளது.  ஆனால் பிரதமரின் அறிவிப்பில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சில இடங்களில் அதுவும் கிடைக்கவில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அதை வாங்க சென்ற மக்களை போலிஸார் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரவு ஏழு மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பேச்சில் முக்கிய அறிவிப்புகள் ஏதாவது வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் இந்த செய்தி பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*