ட்விட்டர் பதிவிற்கு பதவியை நீக்கியது நியாமா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் கோவம் எடப்பாடியை விளாசிய சி வி சண்முகம் !!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயி என அழைத்துவரும், அடுத்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஊடகங்களில் கூறியவருமான பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி நேற்று மாலை தனது விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Loading...

தகவல் தொழிநுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் அவரது அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்பு அதிமுகவில் ஒரு அமைச்சர் மீது எடுக்கப்பட்ட இரண்டாவது நடவடிக்கை இது, இதன் பின்னணியில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டாலும் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி எடப்பாடி இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல்தான் அவரது மாவட்ட செயலாளர் பொறுப்பு நீக்கப்பட்டதற்கு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று கொரோனா பாதிப்பு குறித்து அமைச்சர் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றிணை போட்டிருந்தார் அதில் இந்துக்கள் வழிபாட்டு நம்பிக்கையை கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்கும் சம்பவம் ஒரு பாடம் படிப்பினை கிருஷ்ண பரமாத்மா இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனாவில் இருந்து காப்பாற்று என பதிவு செய்திருந்தார்.

Loading...

அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார், தற்போது அதன் காரணம் வெளியாகியுள்ளது, எடப்பாடி பழனிசாமி நேரடியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தொடர்பு கொண்டு ஏன் இவ்வாறு இந்த நேரத்தில் பதிவிட்டீர்கள் நீங்கள் செய்யும் தவறால் எனக்கு எத்தனை தலைவலி தெரியுமா என கோவப்பட பதிலுக்கு பாலாஜியும் நான் உண்மையை சொல்கிறேன்.

நீங்கள் இப்போது முதல்வராக இருப்பது இந்துக்கள் போட்ட ஒட்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெரியாதா? நான் உண்மையை சொல்வதில் தவறில்லை எனவும் கூறியிருக்கிறார், எடப்பாடி கோவப்பட்டு உங்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன் என்று கூறியுள்ளார்.

எனக்கு அரசியல் தெரியும் அம்மா கொடுத்த அதிகாரம் இது உங்கள் பெயரில் நான் வரவில்லை என பொரிந்து தள்ள இருவருக்குமான மோதல் பன்னீர் செல்வத்திற்கு சென்றுள்ளது, இந்த நேரத்தில் பன்னீர் செல்வம் தலையிட்டு ராஜேந்திர பாலாஜியின் குணம் அது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் அம்மாவின் விசுவாசி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது எனக்கு பிடிக்கவில்லை என கூறியிருக்கிறார்.

அதன் பிறகே ராஜேந்திரபாலாஜியின் கட்சி பதவியை நீக்க வேண்டும் என ஒற்றை காலில் நின்று சாதித்திருக்கிறார் எடப்பாடி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரவை பெற எடப்பாடி முயல்வதாக இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் கிடைக்கும் நேரத்தை வாய்ப்பை பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர் CV சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், கட்சியில் முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் நீங்கள் இல்லை இது உங்களுக்கான கட்சி இல்லை எனவும் கொந்தளித்துள்ளார், மேலும் நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ராஜேந்திர பாலாஜி எவ்வாறு கடினமாக உழைத்தார் என்பது எங்களுக்கு தெரியும் கட்சியில் இனி இவ்வாறு முடிவு எடுத்தால் நாங்கள் வேறு முடிவை எடுக்க வேண்டியது வரும் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

நேற்று இரவு முழுவதும் பன்னீர் செல்வம் வீட்டில் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை செய்துவரும் நிலையில் கட்சியிலும் சரி சமூகவலைத்தளத்திலும் எடப்பாடி ராஜேந்திர பாலாஜியின் மீதான நடவடிக்கையால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும் இந்து அமைப்புகள் ஆதரவாளர்கள் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது..
விரைவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்திப்பார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2668 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*