Connect with us

#24 Exclusive

வித்தியாசம் தெரியுமா? என்ன கமலை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார் எடப்பாடி !

சேலம்:- சமீபகாலமாக தமிழக முதல்வர் எடப்பாடி தொடர்ந்து தனது அரசியல் எதிரிகளையும், விமர்சனம் செய்பவர்களையும் கடுமையான முறையில் அதிரடியாக தானும் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் தமிழக அரசை அடிமைகள் அரசு என்று கிண்டல் செய்தார் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிதம்பரம் இருப்பதே பூமிக்கு பாரம் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டுவரும் நடிகரும் மக்கள் நீதி மையம் அரசியல் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனை எடப்பாடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், குறிப்பாக அரசியலில் மாநகராட்சி உள்ளாட்சி என்ற வித்தியாசமே கமலுக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கள் பின்வருமாறு :-

கமல் வயதாகி விட்டதால் அவர் கட்சி துவக்கி உள்ளார். மாநகராட்சி, ஊரட்சி என எந்த அடிப்படை வித்தியாசமும் தெரியாது. படத்தில் நடித்து வருமானத்தை ஈட்டியுள்ளார். மற்றபடி மக்களுக்கு என எதுவும் செய்யவில்லை. அவருக்கு என்ன தெரியும் நடிகர் சிவாஜியே தோல்வியை தழுவினார். அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும். என்று அதிரடியாக பேசினார் எடப்பாடி.

Loading...

அரசியலுக்கு வந்து முதல் தேர்தலிலேயே 3% மேல் வாக்குகள் வாங்கிய ஒரு தலைவரை உள்ளாட்சி மாநகராட்சி வித்தியாசம் தெரியுமா? என எப்படி கேட்கலாம் இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே என்று கமல் கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

Loading...

©TNNEWS24

Loading...

Trending