Connect with us

#24 Exclusive

பொருளாதார நிபுணர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடன் பிரதமர் ஆலோசனை 31ம் தேதி அதிரடியாக கூடுகிறது நாடாளுமன்றம் இதற்காகத்தானா?

Published

on

சமூகவலைத்தளம் :- மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது முதல் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றினையும் ஒவ்வொரு நடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அதிரடியாக நிறைவேற்றி வருகிறது, அதிலும் குறிப்பாக புதிய அரசு பதவியேற்ற முதல் கூட்ட தொடரில் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்தியாவின் நீண்டநாள் பிரச்னையாக இருந்த காஷ்மீர் விவகாரத்தில் அதிரடியாக முடிவெடுத்து காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதனை இரண்டாக பிரித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் பேரளவிற்கு மட்டுமே எதிர்ப்பை பதிவு செய்தனர், இந்நிலையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது, மத்திய அரசு மற்றொரு அதிரடிக்கு தயாரானது, அதன்படி இந்தியா இந்தியர்களுக்கு என்பதனை உறுதி செய்யவும், குடியுரிமை திருத்த சட்டத்தை முதலில் அமல்படுத்தி அதன் பிறகு தேசிய மக்கள் பதிவேட்டை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சித்தது அதன் ஒரு பகுதியாக CAB கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற்று சட்டமானது.

ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் அமைதியாக இருந்த எதிர்க்கட்சிகள் இந்த முறை பலத்த எதிர்ப்பை பதிவு செய்தன அதற்கு முக்கிய காரணம் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் போன்ற மாநில தேர்தல்களில் பாஜக ஆட்சியை இழந்தது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது, மேற்குவங்கம், அசாம், கேரளா, கர்நாடக, உத்திரபிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் மிக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்து கலவரமாக மாறின.

Loading...

தமிழகத்தில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் தற்போதுவரை எங்கோ ஒரு இடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றன, இந்த சூழலில் மத்திய அரசு ஒரு அங்குலம் கூட குடியுரிமை சட்ட திருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று அறிவித்துவிட்டது, இது நடந்து முடிந்த சம்பவம் இனி நடக்கப்போவது என்ன? வருகின்ற ஜனவரி 26- ம் நாள் இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளது, கோட்டையில் கொடி ஏற்றிவைத்துவிட்டு குடியரசு தலைவர் உரை ஆற்ற இருக்கிறார், அப்போது மத்திய அரசின் சில நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

குறிப்பாக இந்த முறை மதம்மாற்ற தடுப்பு சட்டம் குறித்தோ,அல்லது பொதுசிவில் சட்டம் குறித்த எந்த உத்தரவும் இருக்காது மாறாக இந்தியாவில் ஊடகங்கள் என்ற பெயரில் சில ஊடகங்கள் திட்டமிட்டு மக்கள் மனதில் இந்தியாவிற்கு எதிராகவும், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் பொய் தகவல்களை பரப்புவதாக மத்திய அரசு கருதுகிறது, உலகிலேயே ஊடக சுதந்திரம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில்தான் அதிகம் ஆனால் ஊடகங்களில் பெரும்பாலானவை அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

எனவே அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் என்பது அந்த நாட்டிற்கு பிரச்சனை இல்லை, அதே நேரம் இந்தியாவில் செயல்படும் ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிராக பிரிவினையை விதிப்பதாக கூறப்படுகிறது, எனவே இந்தியாவில் ஊடகங்களின் அதிகாரம் குறித்த சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு கணக்கிட்டுள்ளதாகவும், அதற்கு முன்னோட்டமாக பிரதமர், பொருளாதார ஆலோசகர்கள், தனிப்பிரிவு அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என அனைவரிடமும் தனி தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

வருகின்ற பட்ஜெட் கூட்டத்தில் ஊடகங்கள் இனி இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டால் குறிப்பிட்ட மாதங்கள் முதலில் தடை செய்யப்படும் என்றும் பிறகு முழுவதுமாக தடை செய்யகூடிய அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது, எனவே வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அடுத்த அதிரடியாக மத்திய அரசு ஊடகங்களை இந்தியாவின் இறையாண்மைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொளுத்தி போடும் சாட்டலைட் ஊடகங்கள் இனி கொழுந்துவிட்டு எரியுமே, இனி விவாதத்தில் இந்தியா பொருக்கி தேசம் என்று கூறினால் பொருக்க வைத்து விடுவார்களோ?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending