Connect with us

#24 Exclusive

விரைவில் திமுகவில் பூகம்பம் !

Published

on

விரைவில் திமுகவில் பூகம்பம் !

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இடைத்தேர்தலில் அதிமுகவின் மகத்தான வெற்றியை அடுத்து, வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார். இடைத்தேர்தல் தோல்வியால், விரைவில் திமுகவில் பெரிய பூகம்பம் வெடிக்க இருப்பதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கடும் மன குழப்பத்தில் இருப்பதாக விமர்சனம் செய்தார்.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending