Connect with us

#24 Exclusive

இந்தியாவில் அதிரடியாக தடைவிதிக்கப்பட்ட ஈ – சிகரெட் இனி புகைப்பதோ விளம்பரமோ கூடாது !

Published

on

இந்தியாவில் அதிரடியாக தடைவிதிக்கப்பட்ட ஈ – சிகரெட் இனி புகைப்பதோ விளம்பரமோ கூடாது !

நாடுமுழுவதும் ஈ சிகரெட்டுகள் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் விற்க அதிரடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பள்ளி சிறுவர்கள் பெரும்பாலும் இதற்கு அடிமையாவதே உடனடியாக மத்திய அரசு தடை விதித்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

E -சிகரெட்களை பள்ளி மாணவர்கள் கூட அதிகம் பயன்படுத்துகின்றனர். E சிகரெட்டுகளை மேற்கத்திய நாடுகளில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது 77 % இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில்மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-சிகரெட் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் ஈ சிகரெட் பயன்பாட்டால் மட்டும் 7 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்தியாவில் இனி இ-சிகரெட்கள் ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, விளம்பரம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

சில வலைத்தள தகவல்களின் படி, இ-சிகரெட்கள் எனும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் 150-க்கு மேற்பட்ட சுவைகளில் 400- கும் மேற்பட்ட தனித்தனி பிராண்டுகள் உள்ளது எனவும் , அவற்றில் எதுவும் இதுவரை இந்தியாவில் தயாரிக்க அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்கள் மீதான தடையால், மத்திய பட்ஜெட்டில் 2,028 கோடி ரூபாய் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர் .

E-சிகரெட் என்றால் என்ன ?

E-சிகரெட்கள், பென்டிரைவ், சிறிய உருளை குழாய், பேனா போன்ற வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு விதமாக வெளிவருகின்றன.

அவற்றின் உள்ளே திரவத்தினால் ஆன நிக்கோடின் வேதிப்பொருள் கொண்டு நிரப்பப்படுகிறது, அதிலுள்ள பச்சை நிற பட்டனை அழுத்துவதன் மூலம் திரவம் ஆவியாக மாறிவிடுகிறது அந்த புகையை உறிஞ்சுவதால் சாதாரண சிகரெட்களை புகைப்பது போல் புகைக்கலாம் எனவும் இந்த E-சிகரெட்களால் எந்தவித நாற்றமும் ஏற்படாது எனவும், சாதாரண சிகரெட்டை விட குறைவான உடல் பாதிப்புகள் தான் ஏற்படும் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை இதன் தயாரிப்பாளர்கள் ஏமாற்றுகின்றனர், இதனால் இளைஞர்கள் என பலரும் இதன்மீது ஆர்வம் கொள்கின்றனர்.

E -சிகரெட்களின் ஏற்படும் பாதிப்புகள்?

E-சிகரெட் புகைப்பதால் மலட்டுத்தன்மை, பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் உண்டாவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன . அதிலிருந்து வெளிவரும் ஏரோ எனப்படும் செல்களால் அருகில் இருப்பவர்களும் நுரையீரல் நோயில் பாதிப்படைகின்றனர். கர்ப்பிணிகளுக்கு உடல்நல பாதிப்புகளும், இளம் பருவத்தினருக்கு மூளை வளர்ச்சி உள்ளிட்ட பெரும் பாதிப்புகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வகை சிகரெட்டை தடை செய்தது எதிர்காலத்தை கணக்கிட்டு அரசாங்கம் எடுத்த மிக சரியான நடவடிக்கை என்று பொதுமக்கள் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் அரசிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share